சிஎன்ஜி நிலையத்துக்கு குழாய் மூலம் எரிவாயு விநியோகம்: தமிழகத்தில் முதல்முறையாக கோவையில் தொடக்கம்

By செய்திப்பிரிவு

கோவை: கோவையில் உள்ள இயற்கை எரிவாயு நிரப்பும் நிலையங்களுக்கான எரிவாயுவை முன்பு கொச்சியிலிருந்து டேங்கர் லாரிகள் மூலம் கொண்டுவர வேண்டியிருந்தது.

இந்நிலையில், கோவை மதுக்கரை அருகே உள்ள பிச்சனூரில் அமைக்கப்பட்டு வந்த இயற்கை எரிவாயு விநியோக நிலையம் கடந்த மே மாதம் பயன்பாட்டுக்கு வந்தது. அங்கிருந்து, 2.80 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஸ்டீல் குழாய் மூலம் க.க.சாவடியில் உள்ள ஐஓசிஎல் டீலரின் எரிவாயு விற்பனை நிலையத்துக்கு நேரடி இணைப்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து, அந்த எரிவாயு நிலையத்தில் விற்பனையை இந்தியன் ஆயில் நிறுவனத்தின் செயல் இயக்குநர் (தென் மண்டல பைப்லைன்) ஷைலேஷ் திவாரி நேற்று தொடங்கிவைத்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த விற்பனை நிலையத்துக்கு 24 மணி நேரமும் தடையின்றி தொடர்ந்து எரிவாயு கிடைக்கும். கோவையில் ஏற்கெனவே 10 இடங்களில் சிஎன்ஜி நிரப்பும் நிலையங்கள் உள்ளன. தற்போது இந்த எண்ணிக்கை 11-ஆக அதிகரித்துள்ளது.

வீடுகளுக்கும் நேரடியாக..

கொச்சியிலிருந்து குழாய் மூலம் பிச்சனூரில் உள்ள விநியோக நிலையத்துக்கு வரும் இயற்கை எரிவாயுவை, வரும் நாட்களில் கோவையில் 2 இடங்களில் உள்ள சிஎன்ஜி விற்பனை நிலையங்களுக்கு குழாய் மூலம் நேரடியாக விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வருங்காலத்தில், கோவையில் உள்ள 9 லட்சம் வீடுகளுக்கு நேரடியாக குழாய் மூலம்இயற்கை எரிவாயு விநியோகிக்கப்பட உள்ளது. தொழில்நிறுவனங்களுக்கு தேவையான எரிவாயுவையும் விநியோகிக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்