திருப்பத்தூரில் ரூ.3 லட்சத்தை மீட்டு போலீஸாரிடம் ஒப்படைத்த மூதாட்டி

By செய்திப்பிரிவு

திருப்பத்தூரில் ரூ.3 லட்சத்தை மீட்டு போலீஸாரிடம் மூதாட்டி ஒப்படைத்தார்.

திருப்பத்தூர் தம்பிபட்டியைச் சேர்ந்த மூதாட்டி கவிதா(62). இவர் திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் கொய்யாப்பழம் வியாபாரம் செய்கிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பேருந்து நிலையத்தில் நின்றிருந்தபோது, மது போதையில் இருந்த ஒருவர், தான் கொண்டு வந்த மஞ்சள் பையை அருகே வைத்துவிட்டு கீழே படுத்தார்.

அப்போது சிலர், பையை எடுத்துச் செல்ல முயன்றனர். இதை கவனித்த மூதாட்டி பையை எடுத்து, திருப்பத்தூர் நகர் காவல் எஸ்.ஐ. மலைச்சாமியிடம் ஒப்படைத்தார். அவர் பையை திறந்து பார்த்தபோது அதில் ரூ.3 லட்சம் இருந்தது.

பிறகு போதையில் இருந்த வரிடம் விசாரித்து அவரது மனைவி துர்காவுக்கு எஸ்.ஐ. தகவல் கொடுத்தார். காவல் நிலையம் வந்த துர்காவிடம் விசாரித்தபோது, ‘எனது கணவர் ராஜா. எங்களது சொந்த ஊர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே மேல்நாரியப்பனூர். தற்போது தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே திருப்பூரணிக்காடு பகுதி யில் வசிக்கிறோம்.

எனது கணவர் கடந்த 3-ம் தேதிதான் சிங்கப்பூரில் இருந்து ஊருக்கு வந்தார்.

தனது சிங்கப்பூர் முதலாளி கொடுத்தனுப்பிய சம்பள பாக்கி ரூ.3 லட்சத்தை தேனியைச் சேர்ந்தவரிடம் வாங்கி வந்தார். இதற்கிடையில் மது அருந்தியுள்ளார் என்று தெரி வித்தார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE