விழுப்புரம்: சின்னசேலம் தனியார் பள்ளி கலவரம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் 4 வழக்குகளை பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில் இந்த வழக்கு தொடர்பான அவசர ஆலோசனைக் கூட்டம் ஏடிஎஸ்பி கோமதி தலைமையில் நடைபெற்றது.
இதுகுறித்து சிபிசிஐடி போலீஸாரிடம் கேட்டபோது, “இக்கலவரம் தொடர்பாக சின்னசேலம் வட்டாட்சியர், காவல்துறை, பள்ளி நிர்வாகம் தரப்பில் தரப்பட்ட முறையீட்டின் பேரில் முறையே 3 வழக்குகளும், மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஒரு வழக்கும் என 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தனித்தனியாக வழக்கு பதிவு
மற்ற கலவர வழக்குபோல 300 பேர், 400 பேர் என மொத்தமாக வழக்குப் பதிவு செய்யாமல் தனித்தனி வழக்காக பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற உள்ளது. கலவரம் நடைபெற்ற பள்ளி மற்றும் காயமடைந்த போலீஸாரிடம் விசாரணையை தொடங்கியிருக்கிறோம்.
வீடியோக்கள் ஆய்வு
கலவரத்தின்போது அங்கிருந்த பத்திரிக்கையாளர்களிடம் இருந்து போட்டோ, வீடியோக்கள் உள்ளிட்ட ஆவணங்கள் முழுமையாக பெறப்பட்டு, அதில் பதிவான காட்சிகளையும், அதில் இடம் பெற்றவர்களையும் விசாரணைக்கு உட்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டு உள்ளது.
சிபிசிஐடி எஸ்பி ஜியா உல் ஹக் மேற்பார்வையில் இந்த விசாரணை நடைபெற உள்ளது. இவ்வழக்கு விசாரணையை எப்படி நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு, அதன் அறிக்கையை மேலதிகாரிகளுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம்” என்று தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
38 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago