வாட்ஸ்அப் மூலம் கலவரத்தை தூண்ட முயன்றதாக கடலூர், திண்டுக்கல்லில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது: சின்னசேலம் கலவரத்தில் தொடர்புடைய 2 மாணவர்களும் சிக்கினர்

By செய்திப்பிரிவு

கடலூர்/திண்டுக்கல்: கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் வாட்ஸ்-அப் மூலம் கலவரத்தை தூண்ட முயன்ற கல்லூரி மாணவனை போலீஸார் கைது செய்தனர். இதேபோன்று திண்டுக்கல்லில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த கலவரத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று காலை கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச் பகுதியில் தேவனாம்பட்டினம் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சில்வர் பீச் பகுதியில் 5 பேர் நின்று கொண்டு சின்னசேலம் கலவரம் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். கடலூரிலும் இது போன்று செய்து மாணவியின் மரணத்துக்கு தீர்வு காண வேண்டும் என்று அவர்கள் பேசியது போலீஸாருக்கு தெரியவந்தது.

உடனே போலீஸார் அவர்களை பிடிக்க முயன்றனர். அதில் 4 பேர் தப்பி ஓடிவிட்டனர். அவர்களில் ஒருவர் பிடிபட்டார். போலீஸ் விசாரணையில் அவரது பெயர் விஜய் என்றும் கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருவதும்ம் தெரியவந்தது.

அவரது செல்போன் வாட்ஸ்அப்பில் சின்னசேலம் பள்ளிக் கலவரத்தைப்போல தொடர்ச்சியாக இப்பகுதியிலும் தூண்ட முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் விஜயை (20) கைது செய்தனர்.

விசாரணையில், வாட்ஸ்அப் குழுவில் இடம் பெற்றிருந்த கடலூர் அருகே உள்ள வெள்ளக்கரையை சேர்ந்த கார்த்திக், தினேஷ் ஆகியோர் சின்னசேலம் தனியார் பள்ளி கலவரத்தில் கலந்து கொண்டது தெரியவந்தது. கடலூர் போலீஸார் இருவரையும் பிடித்து சின்னசேலம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதனைத்தொடர்ந்து கடலூர் டிஎஸ்பி கரிக்கால் பாரிசங்கர் தலைமையில் கடலூர் தேவனாம்பட்டினம் சில்வப் பீச் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டு உள்ளனர். சில்வர் பீச் பகுதிக்கு மாணவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் ‘ஜஸ்டிஸ் ஸ்ரீமதி’ என வாட்ஸ்அப் குழு அமைத்து, அதில் இறந்த மாணவியின் புகைப்படத்தை பதிவிட்டு உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பியதாக, திண்டுக்கல் யூசுப்பியா நகரைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவர், வேடசந்தூர் அருகே காலணம்பட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் உதயகுமார்(19) ஆகியோரை காவல்நிலையம் அழைத்து வந்து, திண்டுக்கல் நகர் டி.எஸ்.பி. கோகுலகிருஷ்ணன் விசாரணை நடத்தினார். இவர்கள் வதந்தி பரப்பியது உறுதியானது. இதையடுத்து, இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்