சென்னை: பிரதம மந்திரி சிறு, குறு உணவு உற்பத்தியாளர்களுக்கான நிதியுதவித் திட்டத்தை சுய உதவிக் குழுக்கள் பயன்படுத்த வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத் துறை செயலர் சிவ் தாஸ் மீனா அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை ரிப்பன் மாளிகையில் பிரதம மந்திரி சிறு, குறு உணவு உற்பத்தியாளர்களுக்கான நிதியுதவித் திட்டம் குறித்து நகர்ப்புற சுய உதவிக் குழுக்களுக்கான விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, நகராட்சி நிர்வாக துறை செயலர் சிவ் தாஸ் மீனா தலைமை தாங்கினார். மகளிர் சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், நகராட்சி நிர்வாக துறை செயலர் சிவ் தாஸ் மீனா பேசியதாவது: மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில், பல்வேறு திட்டங்களின்கீழ் சுய தொழில் புரிய கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.
இதில், பெண்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பாக பிரதம மந்திரி சிறு, குறு உணவு உற்பத்தியாளர்களுக்கான நிதியுதவித் திட்டத்தின்கீழ் உணவு உற்பத்தி தொடர்பான தொழில் புரிய கடனுதவி வழங்கப்படுகிறது.
பொதுவாக, வழங்கப்படும் கடனுதவிகளில் வட்டிக்கான மானியம் வழங்கப்படும். ஆனால், இத்திட்டத்தில் வங்கிக் கடனில் 35 சதவீதம் முதலீட்டு மானியம் வழங்கப்படுகிறது. எனவே, மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சார்ந்த உறுப்பினர்கள் இத்திட்டம் குறித்த விவரங்களை முழுவதுமாக அறிந்து பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், குறிப்பாக உணவு உற்பத்தியில் ஈடுபடும் மகளிர் தங்களுடைய இடத்தில் சேகரமாகும் ஈரக் கழிவுகள் அல்லது உணவுக் கழிவுகளை தனியாக பிரித்து வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago