சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் நியமனம்: இபிஎஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் துணைத் தலைவராக அதிமுக முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்படுவதாக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம், சென்னை, ஆழ்வார்பேட்டை, TTK சாலை, கிரவுன் பிளாசா சென்னை அடையார் பார்க் ஹோட்டலில் 17.07.2022 – ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணிக்கு, கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி மு. பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், கட்சியின் சார்பில், சட்டமன்றக் கட்சித் துணைத் தலைவராக முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி.உதயகுமாரும், துணைச் செயலாளராக, முன்னாள் அமைச்சரும், போளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தியும், கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களால் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்