கள்ளக்குறிச்சி கலவரத்தின் பின்னணியில் உள்ள தீய சக்திகளை தண்டிக்க வேண்டும்: தமிழக பாஜக

By செய்திப்பிரிவு

சென்னை: "அரசியலுக்காக ஆதரவுகரம் நீட்டாமல், வன்முறையை கட்டவிழ்த்த சமூக விரோதிகளை கடுமையாக தண்டிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்வருவதோடு இந்த கலவரத்தின் பின்னணியில் இருக்கும் தீய சக்திகள் அனைத்தையும் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும்" என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "மக்கள் அதிகாரம், பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்களை கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக கைது செய்துள்ளது காவல்துறை. தொடர்ந்து இதுபோன்ற இயக்கங்கள் உணர்ச்சிகரமான, பதற்றம் நிறைந்த விவகாரங்களில் மக்களை தூண்டிவிட்டு கலவரங்களை ஏற்படுத்துவதையே வழக்கமாக கொண்டுள்ளன.

மக்களை ஒன்றுசேர்க்கிறோம் என்று பிரச்சாரம் செய்து, கூட்டத்தில் மக்களோடு மக்களாக கலந்து பின்னர் கலவரத்தை தூண்டும் வகையில் வன்முறையில் ஈடுபட்டு பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பது, குறிப்பாக வாகனங்களை தீயிட்டு கொளுத்தி ஒரு பயங்கர கலவர சூழலை ஏற்படுத்துவது இவர்களின் நடைமுறையாக உள்ளது.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் கூட மக்கள் திரண்டிருந்த போது வன்முறை ஏற்பட்டது. காவல்துறை வாகனங்கள் உட்பட பொதுமக்களின் வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. அதன்காரணமாக நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்தனர், மக்கள் அதிகாரம் இயக்கத்தை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட சிலர்தான் கலவரத்தை தூண்டியதாக கைது செய்யப்பட்டனர். ஆனால்,அப்போது எதிர்கட்சியாக இருந்த திமுக காவல்துறையையும், அரசையும் கடுமையாக கண்டித்ததோடு மக்கள் அதிகாரம் உள்ளிட்ட இயக்கங்களுக்கு ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

அதே திமுக தற்போது ஆளுங்கட்சியாக உள்ள நேரத்தில், தமிழக காவல்துறை, கள்ளக்குறிச்சி கலவரத்திற்கு காரணம் என மக்கள் அதிகாரம் மற்றும் பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்களை கைது செய்துள்ளது.

அரசியலுக்காக ஆதரவுகரம் நீட்டாமல், வன்முறையை கட்டவிழ்த்த சமூக விரோதிகளை கடுமையாக தண்டிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்வருவதோடு இந்த கலவரத்தின் பின்னணியில் இருக்கும் தீய சக்திகள் அனைத்தையும் கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும். இல்லையேல், சட்டம் - ஒழுங்கு தமிழகத்தில் சந்தி சிரிக்கும். தமிழகத்தில் வன்முறையை தூண்டும் இந்த இயக்கங்களை தடை செய்ய வேண்டும்.

மேலும், கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் நடந்த உண்மையை நாடறிய செய்ய வேண்டும். அது தற்கொலையாக இருந்தாலும், கொலையாக இருந்தாலும், காரணமானவர்கள் உறுதியாக தண்டிக்கப்பட வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்