மதுரை மாவட்ட அதிமுகவில் முக்கிய பிரமுகர்கள் பலர் வெற்றி பெற்றுள்ளதால், அமைச்சராகும் வாய்ப்பு யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு கட்சியினரிடையே எழுந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் மதுரை மேற்கு, வடக்கு, தெற்கு, சோழவந்தான், உசிலம்பட்டி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மேலூர் ஆகிய எட்டு தொகுதிகளில் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. மதுரை கிழக்கு, மதுரை மத்தி ஆகிய 2 தொகுதிகளில் மட்டும் திமுக வென்றுள்ளது. புறநகரில் ஒரு தொகுதியிலும், மாநகரில் ஒரு தொகுதியிலும் அதிமுக தோல்வியடைந்துள்ளது.
மதுரை மாவட்ட அதிமு கவில் அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜு, ஆர்.பி. உதயகுமார், முன்னாள் மேயர் ராஜன்செல்லப்பா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். திருப்பரங்குன்றம் முன்னாள் எம்எல்ஏ சீனிவேலு தற்போது இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். அதனால், அமைச்சராகும் வாய்ப்பு இவர்கள் 4 பேருக்கும் அதிகமாக இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக் கின்றனர். அதிமுகவில் சாதாரணமா னவர்கள் கூட முக்கியத் துறையின் அமைச்சராக்கப்படலாம் என்ப தாலும், மற்ற தொகுதிகளில் வெற்றிபெற்ற அதிமுக எம்எல் ஏக்களும் அமைச்சராகும் கனவில் உள்ளனர்.
கடந்த ஆட்சியில், முக்கிய அமைச்சராக இருந்த ஓ. பன்னீர்செல்வம், தற்போது வெற்றிபெற்றாலும் கட்சியில் முக்கியத்துவம் இல்லாமல் உள்ளார். கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம், ஆர். விஸ்வநாதன் உள்ளிட்ட அமைச்சர்கள் தோல்வி அடைந்துள்ளனர். கொங்கு மண்டலத்துக்கு அடுத்த படியாக, மதுரை மாவட்டத்தில் அதிகமான தொகுதிகளில் அதிமுகவினர் வென்றுள்ளனர். அதனால், இந்த முறை மதுரை மாவ ட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு முக்கிய துறையில் அமைச்சர் வாய்ப்பு வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
தீவிர சிகிச்சை பிரிவில் திருப்பரங்குன்றம் அதிமுக வெற்றி வேட்பாளர்
திருப்பரங்குன்றம் அதிமுக வேட்பாளர் சீனிவேலு, திமுக வேட்பாளரை காட்டிலும் கூடுதல் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். நேற்று முன்தினம் இரவு இவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக, மதுரை தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்ததால் வெற்றிபெற்ற சான்றிதழை அதிமுகவினரே வாங்கிச் சென்றனர். தீவிர தேர்தல் பணியால் உடல் சோர்வடைந்து மூளையில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. வெற்றிபெற்ற தகவலைக் கூட அவரிடம் தெரிவிக்க முடியாமல் உறவினர்களும், அதிமுகவினரும் கவலை அடைந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago