சென்னை: தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர், உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்து பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் சரஸ்வதி, உறுப்பினர்கள் சரண்யா ஜெயக்குமார், துரைராஜ், முரளிகுமார் உள்ளிட்டோரை பதவி நீக்கம் செய்து, கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு உத்தரவிட்டது.
மேலும், புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்ய, ஆணையத்தின் செயலருக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து, ஆணையத் தலைவர் சரஸ்வதி மற்றும் உறுப்பினர்கள் சரண்யா ஜெயக்குமார் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
விளக்கத்தை கேட்கவில்லை
இந்த வழக்கு விசாரணை, நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், "குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய சட்டப்படி, உரிய காரணங்கள் எதுவும் இல்லாமல் தலைவர் மற்றும் உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்ய முடியாது. மேலும், தங்களை பதவி நீக்கம் செய்யும் முன்பாக, தங்களது தரப்பு விளக்கத்தையும் கோரவில்லை" என்று வாதாடினர்.
கவுரவப் பதவி
அதற்கு ஆட்சேபம் தெரிவித்து தமிழக அரசு தரப்பில், ‘‘குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவி என்பது கவுரவப் பதவியே. அரசிடமிருந்து எந்த ஊதியமும் பெறாத நிலையில், அந்த நியமனங்களை ரத்து செய்த உத்தரவை எதிர்க்க முடியாது. அரசு சட்டப்படி தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது’’ என வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "கவுரவப் பதவியாக இருந்தாலும், ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நீக்கும் முன்பாக, அதற்கான உரிய நடைமுறைகள் எதையும் பின்பற்றவில்லை. குழந்தைகள் உரிமைகள் சட்டப்படி, ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இது தொடர்பாக விளக்கம் அளிக்க உரிய அவகாசம் வழங்காமல், அவர்களின் நியமனத்தை ரத்து செய்தது சட்ட விரோதம்" என்று கூறி, அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
20 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago