‘‘பிரேத பரிசோதனை அறிக்கை ஏற்கத்தக்கது இல்லை’’ - சின்னசேலம் மாணவி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

By செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி: சின்னச்சேலம் தனியார் பள்ளியில் படித்த பிளஸ் 2 மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் அவரது பிரேத பரிசோதனை அறிக்கை ஏற்கத்தக்கது இல்லை எனக் கூறி மாணவியின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள் இன்று (சனிக்கிழமை) கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீமதி என்பவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்தார். இந்தநிலையில் மாணவி விடுதியின் 2-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சின்னசேலம் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து, மாணவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து மாணவியின் மரணத்திற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாணவியின் பெற்றோர், உறவினர்கள், ஊர் மக்கள் வெள்ளிக்கிழமை வேப்பூர் நான்குமுனை சந்திப்பில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்

இந்தநிலையில் மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்று வெளியான நிலையில் அதில் மாணவி உயிரிழப்புக்கு முன்பு அவரது உடலில் காயங்கள் இருந்ததாகவும், மாணவியின் உடைகளிலும் ரத்தக் கறை இருந்தாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இருந்தபோதிலும் அது போலியான அறிக்கை எனக் கூறி அவரது உறவினர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்தனர்.

இதனிடையே உயிரிழந்த மாணவியின் இல்லத்திற்குச் சென்ற தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன், மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறி, முறையான விசாரணை நடத்தி காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்