காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை: கல்லணையில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வரும் நிலையில் கல்லணணைக் கால்வாய்களில் முன்கூட்டியே தண்ணீர் திறந்துவிடப்பட இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் காவிரியில் தற்போது சுமார் 1.08 லட்சம் கன அடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. வெள்ளிக்கிழமை மதியம் 12.00 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 114.81 அடி, கொள்ளளவு 85.434 டி.எம்.சி. நீர்வரத்து 1.08 லட்சம் கன அடியாக உள்ளது. இந்தநிலையில் தண்ணீர் வரத்து இருந்தால், ஜூலை 16ம் தேதி இரவு மேட்டூர் அணை 120 அடியை எட்டும் என எதிர்நோக்கப்படுகிறது.

தற்சமயம் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து 25,000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் 5.20 லட்சம் ஏக்கர் பாசனம் பெறும் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் கால்வாய் மூலம் 45,000 ஏக்கர், புள்ளம்பாடி வாய்க்கால் மற்றும் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால்கள் மூலம் 42,000 ஏக்கர் பாசன பரப்புகள் பயன்பெறும். இந்த வாய்க்கால்களின் மூலம் 129 கண்மாய்களுக்கு தண்ணீர் நிரப்ப இயலும், இதன் மூலம் 2000 கன அடி தண்ணீர் எடுத்து பயன்படுத்தலாம்.

மேலும், கல்லணையிலிருந்து பிரியும் கல்லணைக் கால்வாய் மூலம் 694 கண்மாய்களுக்கு 1000 கன அடி தண்ணீர் எடுத்து வழங்கவும், கொள்ளிடத்தின் மூலம் கடலுார் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களிலுள்ள 1.32 லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறவும் மற்றும் வீராணம் ஏரியை நிரப்பவும் 2000 கன அடி தண்ணீர் தேவைப்படுகிறது. ஆக மொத்தம் 5000 கன அடி தண்ணீர் கூடுதலாக எடுத்து பயன்படுத்தலாம்.

மேலே குறிப்பிட்ட வாய்க்கால்களுக்கு ஆகஸ்ட் 1-ம் தேதி தண்ணீர் திறந்து விட பாசன விதி தொகுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் தண்ணீர் இருப்பை கருத்தில் கொண்டு விவசாய பணிகளுக்கு முன்னரே திறந்து விட உத்தேசிக்கப்பட்டு, அனைத்து கால்வாய்களிலும் ஜூலை 16-ம் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்