சென்னை: "கல்லூரி மாணவிகளிடம் 'செல்ஃபி வித் அண்ணா' என்று பரப்புரை மேற்கொள்வது மிகுந்த வெட்கக் கேடானது" என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "தமிழகத்தில் பாஜகவை காலூன்ற வைப்பதற்கு பல்வேறு அதிரடி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அனைத்தும் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன. எட்டு ஆண்டுகால பாஜக ஆட்சியில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடி வருகிற நிலையிலும், பொருளாதார பேரழிவை சந்தித்துக் கொண்டிருக்கிற சூழலிலும் பாஜக மீது மக்கள் கடும் சினத்துடன் உள்ளனர். இதனால், தமிழக மக்களிடம் பாஜக செல்கிறபோது பல்வேறு பிரச்சினைகள் எழுந்து சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு வித்திடுகின்றன.
திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக மகளிரணி சார்பில் 'செல்ஃபி வித் அண்ணா' என்று போட்டி நடத்தப்படுவதாகவும், அதில் பங்கு பெற்று வெற்றி பெறும் மாணவர்கள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என அழைக்கும் உறுப்பினர் சேர்க்கை முகாம் அந்தப் பகுதியிலுள்ள அரசு கல்லூரிகளில் நடத்தப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.
இதனடிப்படையில் பாஜகவினர் கல்லூரி வளாகத்தில் துண்டு பிரசுரங்களை விநியோகித்த போது, கல்லூரிப் பேராசிரியர்களும், மாணவிகளும் இங்கே பரிட்சை நடந்து கொண்டிருக்கும் போது இத்தகைய முயற்சிகளில் ஏன் ஈடுபடுகிறீர்கள் என்று வாக்குவாதம் செய்தனர். பாஜகவினரோடு கடுமையான மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது. இதுகுறித்து கல்லூரி முதல்வர், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளார்.
பாஜகவினரின் இத்தகைய மலிவான முயற்சிகளுக்கு கடும் எதிர்ப்பு தோன்றிய பிறகு, கல்லூரி வளாகத்திலிருந்து அவர்கள் வெளியேறியுள்ளனர். கல்வி பயில வேண்டிய கல்லூரியில் பாஜகவினர் அற்பத்தனமான முயற்சிகளில் ஈடுபடுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இத்தகைய முயற்சிகளை கல்லூரி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
சமீபத்தில், மதுரை காமராஜர் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில், ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்க அழைத்ததோடு, மத்திய பாஜக அமைச்சர் எல். முருகனையும் அழைத்தது பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியது. இதனால், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராகவும், பல்கலைக் கழக இணை வேந்தராகவும் உள்ள க. பொன்முடி பட்டமளிப்பு விழாவையே புறக்கணித்தது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.
தமிழக ஆளுநர் பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பை வைத்துக் கொண்டு, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறி, ஒரு நாலாந்தர அரசியல்வாதி போல் நடந்து கொள்வதை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏற்கனவே, புதிய கல்விக் கொள்கை என்ற போர்வையில் பாஜக எடுத்த முயற்சிகளுக்கு, தமிழக மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் வெளிப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. பாஜக எடுக்கும் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த நிலையில் கல்லூரி மாணவிகளிடம் 'செல்ஃபி வித் அண்ணா' என்று பரப்புரை மேற்கொள்வது மிகுந்த வெட்கக் கேடானது,கடும் கண்டனத்திற்குரியது" என்று அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
38 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago