கேரளா எல்லையில் 13 இடங்களிலும் குரங்கு அம்மை நோய் கண்காணிப்பு பணி: மா.சுப்பிரமணியன் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: கேரளா எல்லையில் 13 இடங்களிலும் குரங்கு அம்மை நோய் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழகத்தில் 18 வயது முதல் 59 வயது வரையுள்ளவர்களுக்கு பூஸ்டர் தவணை கரோனா தடுப்பூசியை இலவசமாக அரசு மையங்களில் வழங்கும் நிகழ்ச்சியை எழும்பூரில் உள்ள அரசு குடும்ப நல பயிற்சி மையத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் அளித்த பேட்டியில், "தமிழகத்தில் முகாம்கள் மூலம் மட்டும் 4 கோடியே 61 லட்சத்து 75,586 டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 18 வயதிற்கு மேல் 95.27 சதவீதத்தினர் முதல் தவணையும், 87.35 சதவீதத்தினர் இரண்டாவது தவணையும் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். அரசு மற்றும் தனியார் மூலம் இதுவரை 11 கோடியே 63 லட்சத்து 18,727 டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு 75-வது ஆண்டு பவள விழா சுதந்திர தினத்தை முன்னிட்டு இலவசமாக பூஸ்டர் தவணை தடுப்பூசியை ஜூலை 15-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை 75 நாட்களுக்கு 18 வயது முதல் 59 வயது வரையுள்ளவர்களுக்கு அரசு மையங்களில் வழங்கும் திட்டத்தை அறிவித்தது. 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் தவணை தடுப்பூசி பெற தகுதியுடையவர்களாவார்கள். ஆனால், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் அல்லது 26 வாரங்கள் நிறைவடைந்திருக்க வேண்டும்.

தமிழகத்தின் 38 மாவட்டங்களிலுள்ள 2,590 அரசு கரோனா தடுப்பூசி மையங்கள் இத்திட்டம் செயல்படுத்தப்படும். பெரிய அலுவலக வளாகங்கள் (அரசு,தனியார்), தொழில் நிறுவனங்கள், ரயில் நிலையங்கள், மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும். சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அனைத்தும் கோவின் (CoWIN) இணையதளம் மூலம் மட்டுமே பதிவு செய்யப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்படும்.

சிறப்பு தடுப்பூசி முகாம்கள், சுற்றுலா தலங்கள், மேளா மற்றும் சபைகள் உள்ள இடங்களில் நடத்தப்படும். மாநில மற்றும் மாவட்ட அளவில் வாரந்தோறும் தடுப்பூசி சாதனைகள் ஆய்வு செய்யப்படும். பொது மக்கள் அனைவரும் அரசு இலவசமாக வழங்கும் வாய்ப்பினை பயன்படுத்தி 18-59 வயதுவுடையவர்கள் பூஸ்டர் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டு கரோனா என்ற பெருந்தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும்.

அரபு நாட்டில் இருந்து கேரளாவுக்கு வந்த ஒருவருக்கு குரங்கம்மை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, கேரளா - தமிழகம் எல்லையிருக்கின்ற 13 இடங்களிலும் குரங்கு அம்மை நோய் கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வுகள் அந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் செய்யப்பட்டு கொண்டிருக்கிறது.

பன்னாட்டு விமான நிலையங்களில் இந்த நோய் தொடர்பாக கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 15 வயது சிறுமியிடம் இருந்து சட்ட விரோதமாக எடுக்கப்பட்ட கருமுட்டை தொடர்பாக சம்பவத்தில் நேற்றைக்கு 2 இடங்களில் உள்ள ஸ்கேன் சென்டர்கள் முடப்பட்டது. 4 மருத்துவமனைக்கு 15 நாட்களுக்குள் முடுவதற்கான நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. நோயாளிகளை படிப்படியாக டிஸ்சார்ஜ் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்