புதுச்சேரியில் பிரதமர் திறந்துவைத்து 6 மாதங்களுக்குப் பிறகு மாணவர் பயன்பாட்டுக்கு வந்த காமராஜர் மணி மண்டபம்

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: இரண்டு முறை அடிக்கல் நாட்டப்பட்டு, 15 ஆண்டுகள் கட்டுமானப் பணிக்கு பிறகு பிரதமர் மோடி திறந்து வைத்து ஆறு மாதங்களுக்கு பிறகு காமராஜர் மணி மண்டபம் புதுச்சேரியில் மாணவர் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. சென்டாக் மாணவர் சேர்க்கை, நூலகம், யூபிஎஸ்சி உட்பட இளையோருக்கான பல நிகழ்வுகள் இங்கு நடத்தப்படவுள்ளது.

புதுச்சேரியில் கடந்த 2007-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் முதல்வராக ரங்கசாமி இருந்தபோது கருவடிக்குப்பம் சித்தானந்தா கோயில் அருகே ரூ.14 கோடியில் 3.75 ஏக்கரில் காமராஜருக்கு மணிமண்டபம் அமைக்க அடிக்கல் நாட்டினார்.

இதனையடுத்து 2009-ம் ஆண்டு நிதி நெருக்கடி காரணமாக இந்தப் பணி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து 2014-ம் ஆண்டு ஹட்கோ கடனுதவியில் மீண்டும் கட்டுமான பணி தொடங்கியது. அப்போது முதல்வராக இருந்த ரங்கசாமி 2-வது முறையாக காமராஜர் மணிமண்டபத்திற்கு அடிக்கடி நாட்டினார்.

இந்த மணிமண்டபத்தில் யூபிஎஸ்சி பயிற்சி மையம், உலகத் தரம் வாய்ந்த நூலகம், 130 பேர் அமரக் கூடிய ஆடிட்டோரியம், 4417 சதுர அடி தரைத்தளம், காமராஜர் சிலை, அவரது வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சி, உள்ளிட்டவை அமைக்க முடிவு எடுக்கப்பட்டு பணிகள் நடந்தன.

ரூ.23 கோடியில் கட்டப்பட்டுள்ள காமராஜர் மணி மண்டபத்தை 14 ஆண்டுக்கு பின் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் டெல்லியிலிருந்து ஆறு மாதங்கள் முன்பு திறந்து வைத்தார். அதன்பிறகு மண்டபம் பயன்படுத்தப்படாமல் இருந்தது.

இந்நிலையில் காமராஜர் பிறந்தநாளான இன்று முதல் முறையாக மாணவர்கள் தினவிழா நடந்தது. விழாவுக்கு கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். அரசியலுக்கு வர ஊக்கம் எது- ஆளுநர் தகவல் விழாவில் ஆளுநர் தமிழிசை பேசுகையில், "காமராஜர் எண்ணப்படி அவரின் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வர உள்ள நுாலகத்தில் உலகத்தரம் வாய்ந்த புத்தகங்களும், கணிணியும் இடம்பெற வேண்டும் என முதல்வர், கல்வியமைச்சர் விரும்புகின்றனர்.

புதுவையில் உள்ள மாணவர்கள் ஏற்கெனவே அறிவாளிகள். இந்த மணிமண்டபம் அவர்களை மேலும் அறிவாளிகளாக மாற்ற உதவும். சரித்திரம் சில நேரங்களில் நல்ல பக்கங்களை எழுதும். அதில் ஒன்றுதான் காமராஜர் பிறந்தநாள். காமராஜரை பார்த்து வளர்ந்த நானும், அரசியலில் அவரை பின்பற்றும் முதல்வர் ரங்கசாமியும் உயர்ந்த பதவியில் இருந்து புதுவை மக்களுக்கு சேவையாற்றுவது மகிழ்ச்சியளிக்கிறது. நான் அரசியலுக்கு வர ஊக்கம் என்ன என்று பலரும் கேட்டுள்ளனர். என் தந்தை குமரி அனந்தனுடன் காமராஜர் வீட்டுக்கு பலமுறை சென்றுள்ளேன்.

எனது தந்தை காமராஜருடன் பலமணி நேரம் பேசிக்கொண்டிருப்பார். அதனால் காமராஜர் வீட்டு வாசலில் பலமுறை காத்திருந்துள்ளேன். நான் அரசியலுக்கு வர காமராஜர் வீட்டு வாசலில் காத்திருந்ததுதான் எனக்கு ஊக்கமளித்தது. பிரதமர் நரேந்திர மோடி புதிய கல்வி கொள்கையை தேசிய கல்வி கொள்கையாக அறிவித்துள்ளார். இதில் மாணவர்களுக்கு உணவளிக்க வேண்டும் என முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. புதிய கல்விகொள்கை மாணவர்களுக்கு கல்வியுடன், ஊட்டச்சத்து அளிக்கவும் வலியுறுத்துகிறது.

காமராஜர் என்றாலே கல்விதான் நினைவுக்கு வரும். இந்த கல்வி வளாகம் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தேவையான அனைத்தையும் வழங்கும்" என்று குறிப்பிட்டார்.

கிடப்பிலுள்ள திட்டங்களை நிறைவேற்றுவேன்- முதல்வர் ரங்கசாமி இந்நிகழ்வில் பேசுகையில், "அனைவருக்கும் கல்வி என்பதுதான் காமராஜரின் நோக்கம். இந்த வளாகத்தில் ஐஏஎஸ் பயிற்சி, அதற்கான நூலகம், சென்டாக் அலுவலகம், அரங்கம் அமைக்கப்பட உள்ளது. மாணவர்களின் கலை நிகழ்வுகள், பட்டமளிப்பு நிகழ்வுகள் அனைத்தும் நடத்தலாம்.

பள்ளிக் கல்வியை ஏற்கெனவே இலவசமாக வழங்கி வருகிறோம். தற்போது உயர்கல்வி படிக்கும் வகையில் கல்லூரி கல்வியையும் இலவசமாக வழங்கி வருகிறோம். எந்த படிப்பு வேண்டுமானாலும், எங்கு சென்று வேண்டுமானாலும் படிக்கும் நிலையை உருவாக்கியுள்ளோம். அரசின் இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி மாணவர்கள் படித்து முன்னேற வேண்டும். அரசு பணி அனைவருக்கும் கிடைக்குமா என எண்ணக்கூடாது. படிப்பதன்மூலம் நல்ல சிந்தனை உருவாகும். அந்த சிந்தனை முன்னேற்றத்தை உருவாக்கும். புதுவையில் படித்த மருத்துவர்கள் இன்று உலகம் முழுவதும் சிறந்த மருத்துவர்களாக உள்ளனர்.

மருத்துவக் கல்வியும் இலவசமாக கிடைக்க வழி செய்துள்ளோம். மாற்றுக் கட்சியை சேர்ந்தவர்கள்கூட காமராஜர் ஆட்சி வேண்டும் என விரும்புவர். பிரதமரின் கூற்றுப்படி காமராஜர் வழியில் சிறந்த ஆட்சியை பெஸ்ட் புதுவையை உருவாக்குவோம். பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். பல திட்டங்களை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம். ஒரு சில திட்டங்கள் கிடப்பில் உள்ளது. அதையும் அரசு நிறைவேற்றும். இந்த மணிமண்டபத்துக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்யும்." என்று தெரிவித்தார்.

விழாவில் பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சந்திரபிரியங்கா, சாய்சரவணக்குமார், செல்வகணபதி எம்பி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கல்வித்துறை செயலர் ஜவகர் வரவேற்றார். இயக்குனர் ருத்ரகவுடு நன்றி கூறினார். முன்னதாக மணிமண்டபத்தில் காமராஜர் சிலைக்கு ஆளுநர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 secs ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்