சென்னை: கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வேகமாக குணமடைந்து வருவதாக காவேரி மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 12 ஆம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.
இந்நிலையில் மருத்துவப் பரிசோதனைக்காக நேற்று காலை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் முதல்வர் வேகமாக குணமடைந்து வருவதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
» கரோனா சிகிச்சை: முதல்வர் ஸ்டாலினிடம் நலம் விசாரித்த பிரதமர் மோடி
» மத்திய அமைச்சர் முருகனை பட்டமளிப்பு விழாவுக்கு அழைத்ததை அரசியலாக்க கூடாது: ஆளுநர் தமிழிசை
இது குறித்து காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், " கரோனா தொடர்பான மருத்துவ பரிசோதனைகளுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவப் பரிசோதனை முடிந்த கரோனா சிகிச்சை வழிகாட்டு நெறிமுறைகள் படி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் வேகமாக குணமடைந்து வருகிறார். அவரது உடல்நிலை நன்றாக உள்ளது. அவர் மேலும் சில நாட்கள் ஓய்வில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
21 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago