சேலம் பெரியார் பல்கலைக்கழகம் காவிமயமாகிக் கொண்டிருக்கிறது: கி.வீரமணி

By செய்திப்பிரிவு

சென்னை: " சேலம் பெரியார் பல்கலைக்கழகத் தேர்வு வினாத்தாளில் சாதி குறித்து கேள்விக் கேட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. சாதி தர்மம் அங்கு படமெடுத்து ஆடிக் கொண்டிருக்கிறது.

எனவே இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கையை உயர் கல்வித்துறை அமைச்சர் எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால், திராவிடர் கழகம் கடுமையாக போராடும்" என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

சென்னையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது:" சேலம் பெரியார் பல்கலைக்கழகத் தேர்வு வினாத்தாளில் சாதி குறித்து கேள்விக் கேட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஏற்கெனவே சேலம் பெரியார் பல்கலைக்கழகம் காவிமயமாகிக் கொண்டிருக்கிறது.

சாதி தர்மம் அங்கு படமெடுத்து ஆடிக் கொண்டிருக்கிறது. எனவே இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கையை உயர் கல்வித்துறை அமைச்சர் எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால், திராவிடர் கழகம் கடுமையாக போராடும்" என்று அவர் கூறினார்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தற்போது செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதில் எம்ஏ வரலாறு பாடத்திற்கான இரண்டாவது செமஸ்டர் தேர்வுக்கான கேள்வித்தாளில் எது தாழ்ந்த சாதி என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. 4 விடைகளில் ஒன்றை தேர்வு செய்யும் வகையிலான கேள்வியாக இது கேட்கப்பட்டுள்ளது.

இதில் மஹர், நாடார், ஈழவர், ஹரிஜன் ஆகிய நான்கு சாதிகள் குறிப்பிடப்பட்டு, இவற்றில் எது தாழ்ந்த ஜாதி என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. இந்த கேள்வி பெரியாரின் பெயரால் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் கேட்கப்பட்டிருப்பதற்கு பல்வேறு தரப்பிலும் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர், "அந்த கேள்வித்தாள் பெரியார் பல்கலைக்கழகத்தில் தயாரிக்கப்பட்டது அல்ல. பிற பல்கலைக்கழகங்களில் உள்ள பேராசிரியர்களால் தயாரிக்கப்பட்டது. அந்தக் கேள்வித்தாள் கசிந்து விடக்கூடும் என்பதால் அதனை படித்து பார்க்கும் வழக்கம் பல்கலைக்கழகத்தில் இல்லை. இது குறித்து எந்த புகாரும் எனக்கு வரவில்லை. அப்படி வந்தால் அதன் மீது உரிய விசாரணை நடத்தப்படும்'' என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்