சென்னை: மாணவர்கள் டாட்டூ, செல்போனுடன் பள்ளிக்கு வர அனுமதிக்கக் கூடாது என்று மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு, சமூகப்பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக, சமூகப் பாதுகாப்புத் துறை சார்பில், அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாணவ, மாணவிகள் சரியான நேரத்தில் பள்ளிக்கு வரவேண்டும். தலையில் எண்ணெய் வைத்து, தலை வார வேண்டும்.காலில் காலணி அணிய வேண்டும்.பெற்றோர் கையெழுத்துடன், வகுப்பாசிரியர் அனுமதி பெற்றுத்தான் விடுப்பு எடுக்க வேண்டும்.
பிறந்த நாள் என்றாலும் மாணவ, மாணவிகள், சீருடையில்தான் பள்ளிக்கு வர வேண்டும், மாணவ, மாணவிகள், பள்ளிக்கு இருசக்கர வாகனம், செல்போன் கொண்டுவர அனுமதி இல்லை. அடிக்கடி கை, கால்களைக் கழுவ வேண்டும்.
மாணவ, மாணவிகள் போதைப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது. டாட்டூ போன்றவற்றுடன் பள்ளிக்கு வரவும் அனுமதி இல்லை. மாணவர்கள் பள்ளிக்குச் செல்லும்போது காப்பு, கம்மல், செயின், கயிறு போன்றவற்றை அணியக் கூடாது. இது தொடர்பாக மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
மேலும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நீதிநெறிக் கதைகள், தெனாலிராமன் கதைகள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் கதைகள்உள்ளிட்ட நல்லொழுக்க கதைகளை எடுத்துரைக்க வேண்டும். மாணவ, மாணவிகளிடம் அமைதிக்கலாச்சாரத்தை ஊக்குவிப்பதுடன், சுற்றுச்சூழல், குடும்ப உறவுமுறை கள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago