காஞ்சிபுரம்: "இனிமேல் அதிமுகவை நாம் விமர்சிக்கவோ, திட்ட வேண்டிய அவசியமோ இல்லை. அவர்களே அவர்களைத் திட்டிக் கொள்கின்றனர். அவர்களுக்கிடையே கல்லெறிந்து கொள்கின்றனர்" என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில், திமுகவினருக்கு பொற்கிழி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், "திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையிலான வித்தியாசத்தை கடந்த 3, 4 நாட்களாக நடக்கும் நிகழ்வுகளைப் பார்த்து, இப்போது நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.
இனிமேல் அதிமுகவை நாம் விமர்சிக்கவோ, திட்ட வேண்டிய அவசியமோ இல்லை. அவர்களே அவர்களை திட்டிக் கொள்கின்றனர். அவர்களுக்கிடையே கல்லெறிந்து கொள்கின்றனர்.
ஏனென்றால், அந்தக் கட்சிக்கு ஒரு வரலாறு கிடையாது. திமுகவுக்குதான் அந்த வரலாறு இருக்கிறது. இங்கு அமர்ந்திருக்கும் நீங்கள்தான் அந்த வரலாறுக்கான சாட்சிகள். நீங்கள் இல்லாமல் திமுக கிடையாது.
எனவே, என்னைப் போன்ற இளைஞர்களை, இந்த சின்னவனை, நீங்கள் அத்தனைபேரும் உங்கள் கைகளில் பிடித்து என்னையும் என் போன்ற இளைஞர்களையும் நீங்கள் வழிநடத்த வேண்டும். நீங்கள் வழிகாட்டுங்கள், உங்கள் வழிகாட்டுதலின்படி நாங்கள் அனைவரும் வழிநடக்கிறோம்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago