திருவள்ளூர்: தமிழகத்தில் புதிதாக 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
ரெனால்ட் நிசான் நிறுவன சமூக பங்களிப்பு நிதியின் (சிஎஸ்ஆர்) கீழ், ரூ.75 லட்சம் மதிப்பில் 10 கிலோ லிட்டர் திரவ ஆக்சிஜன் சேமிப்பு கிடங்கு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில், மருத்துவ பணியாளர்கள் பணிக்கு வரும்போது, அவர்களின் குழந்தைகளை பராமரிக்க ஏதுவாக ஜிஎன்கே பவுண்டேஷன் நிறுவன சமூக பங்களிப்பு நிதியின்கீழ், ரூ.15 லட்சம் மதிப்பில், கல்வி மற்றும் விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய குழந்தைகள் பராமரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆக்சிஜன் சேமிப்பு கிடங்கு மற்றும் குழந்தைகள் பராமரிப்பு மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: திருத்தணி அரசு மருத்துவமனை, ரூ.47 கோடி மதிப்பில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட உள்ளது. அதேபோல், தமிழகத்தில் புதிதாக 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், சுகாதாரத் துறை முதன்மை செயலர்செந்தில்குமார், பொது சுகாதாரம்மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு, மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், மருத்துவக் கல்லூரி முதல்வர் அரசி வத்சன், திருவள்ளூர் மற்றும் பூந்தமல்லி சுகாதார மாவட்டங்களின் துணை இயக்குநர்களான ஜவஹர்லால், செந்தில்குமார் மற்றும்எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன்,சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago