நல்ல ஆரோக்கியத்துடன் விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன் - முதல்வருக்கு ஆளுநர் வாழ்த்து

By செய்திப்பிரிவு

சென்னை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதல்வர் நல்ல ஆரோக்கியத்துடன் விரைந்து குணமடைய பிரார்த்திப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் முதல்வர் நல்ல ஆரோக்கியத்துடன் விரைந்து குணமடைய பிரார்த்திப்பதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி எழுதியுள்ள கடிதத்தில், "கோவிட்-19 தொற்றினால் நீங்கள் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்து நான் மிகுந்த கவலையுற்றேன். வலிமைமிக்க தலைவரான தாங்கள், முக்கியமாக பொதுமக்களுடன் நேரடித் தொடர்பில் இருப்பதால், இந்தத் தொற்றுக்கு ஆட்பட்டிருக்கிறீர்கள். தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன், விரைந்து குணமடைய நான் பிரார்த்திக்கிறேன்." இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE