டி.பி.ஜெயின் கல்லூரியை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிடுக: மநீம

By செய்திப்பிரிவு

சென்னை: கல்வியை வியாபாரமாக்க வேண்டாம், டி.பி.ஜெயின் கல்லூரியை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டுமென மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து இன்று மநீம வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள டி.பி.ஜெயின் கலை, அறிவியல் கல்லூரியை தனியார்மயமாக்கும் முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும். இக்கல்லூரிக்கு தனி அலுவலரை நியமித்து, அரசு உதவிபெறும் இடங்களுக்கான சேர்க்கையை உடனடியாகத் தொடங்க வேண்டும்.

துரைப்பாக்கத்தில் 1972-ம் ஆண்டு முதல் தமிழக அரசின் நிதியுதவியுடன் செயல்படும் டி.பி.ஜெயின் கலை, அறிவியல் கல்லூரியில் உள்ள 10 துறைகளில், ஆண்டுதோறும் 1,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு கட்டணத்தில் பயில்கின்றனர். சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஒரே அரசு உதவிபெறும் கல்லூரி என்பதால், செம்மஞ்சேரி, கண்ணகி நகர், எழில் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மாணவர்கள் மற்றும் ஏழை மாணவர்களின் உயர்கல்விக் கனவை நனவாக்குவதில் இக்கல்லூரி பெரும் பங்கு வகிக்கிறது.

இக்கல்லூரியில் சுயநிதிப் பிரிவும் செயல்படுகிறது. அரசு உதவிபெறும் பிரிவைக் காட்டிலும் இதில் பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதாவது, அரசு உதவிபெறும் பிரிவில் ஆண்டுக்கு ரூ.850 நிர்ணயிக்கப்பட்டால், சுயநிதிப் பிரிவில் ரூ.42,000 வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக அரசு உதவிபெறும் பிரிவில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாக, ரூ.40 ஆயிரத்துக்கும் மேல் வசூலித்ததாகவும், 2020-ம் ஆண்டு முதல் அரசு உதவிபெறும் பிரிவில் மாணவர் சேர்க்கையை கல்லூரி நிர்வாகம் நிறுத்திவிட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

அதேபோல, 2003-ம் ஆண்டுக்குப் பிறகு அரசு உதவிபெறும் பிரிவில் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களை நியமிப்பதையும் கல்லூரி நிர்வாகம் நிறுத்தியுள்ளது. மேலும், 6 ஆண்டுகளாக தகுதியான முதல்வரை நியமிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. அரசின் விதிகளுக்குப் புறம்பாக செயல்படும் கல்லூரி நிர்வாகத்தின் செயல்பாடுகளையும், அதிக கட்டணம் வசூலித்ததையும் கண்டித்த 11 பேராசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதைக் கண்டித்துப் பேராசிரியர்கள் போராடி வருகின்றனர்.

2016-க்குப் பிறகு அரசு உதவிபெறும் பிரிவு, ஏறத்தாழ சுயநிதிக் கல்லூரிப் பிரிவாக மாற்றப்பட்டுள்ளது. அதிக கட்டணத்தை சட்ட விரோதமாக செலுத்துமாறு மாணவர்கள் கட்டாயப் படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அரசு உதவிபெறும் பிரிவுகளில் பயின்ற ஏழை மாணவர்கள், படிப்பைக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சிலர் வட்டிக்குக் கடன் வாங்கி, படிப்பைத் தொடந்துள்ளனர்.

தொடர்ந்து அரசு உதவிபெறும் பிரிவில் மாணவர்கள் சேரவில்லை என்று கூறி, அதை சுயநிதிப் பிரிவாக மாற்றி, அதிக கட்டணம் வசூலிப்பதே கல்லூரியின் நோக்கம் என்று அங்குள்ள பேராசிரியர்களே புகார் தெரிவிக்கின்றனர்.

எனவே, சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்படும் இக்கல்லூரிக்கு தனி அலுவலரை நியமித்து, அரசே கல்லூரியை ஏற்று நடத்த வேண்டும். அரசு உதவிபெறும் பிரிவில் உடனடியாக மாணவர் சேர்க்கையைத் தொடங்க வேண்டும். மேலும், மாநிலம் முழுவதும் உள்ள அரசு உதவிபெறும் கல்லூரிகளின் கட்டணம் உள்ளிட்ட விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பதை தமிழக அரசு உறுதிபடுத்த வேண்டும். ஏழை மாணவர்களின் கல்விக் கனவுகளை நனவாக்கும் அரசு உதவிபெறும் கல்லூரிகளைப் பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.'' இவ்வாறு மநீம தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்