சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி உழவர் சந்தையில் வாடிக்கையாளர்களை ஈர்க்க ரூ.200-க்கு காய்கறிகள் வாங்குபவர்களுக்கு 1 கிலோ தக்காளி, தேங்காய் இலவசமாக வழங்கப்பட்டன.
சிங்கம்புணரி பேரூராட்சியில் திண்டுக்கல் சாலையில் நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த உழவர் சந்தை, தொடர்ந்து மக்களின் கோரிக்கையை ஏற்று ஜூலை 7-ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. மேலும் வியாபாரிகள் சாலையோரங்களில் கடை அமைப்பதை தடுக்கும் வகையில், அவர்களுக்கும் உழவர் சந்தை வளாகத்திலேயே கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில் உழவர் சந்தைக்கு தொடர்ந்து வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் நேற்று ரூ.200-க்கு காய்கறிகள் வாங்கியவர்களுக்கு 1 கிலோ தக்காளி, 1 தேங்காய் இலவசமாக வழங்கப்பட்டது. தக்காளியை உதவி வேளாண்மை அலுவலர் காந்தி, தேங்காயை தொழிலதிபர் செல்வம் ஆகியோர் வழங்கினர்.
இதேபோல் இன்று (ஜூலை 13) முதல் ஜூலை 15-ம் தேதி வரை ரூ.200-க்கு காய்கறிகள் வாங்குவோருக்கு 1 கிலோ தக்காளி, 1 தேங்காய் இலவசமாக வழங்குவதாக திமுக நகரச் செயலாளர் கதிர்வேல் அறிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
12 hours ago