சென்னை: நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை திருப்பி அளிக்காவிடில் விடைத்தாள் திருத்தப்படாது என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்புகளான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பில் சேருவதற்கான 'நீட்' தேர்வு வரும் 17 ஆம் தேதி தேசிய தேர்வுகள் முகமை சார்பில் நடத்தப்படுகிறது. பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை இந்தத் தேர்வு நடைபெறுகிறது. இதற்காக, நாடு முழுவதும் 546 முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டு நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது. https://neet.nta.nic.in/ என்ற இணையதளம் மூலம் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்கள் மற்றும் உதவிகளுக்கு 011-40759000 என்று தொலைபேசி எண் மற்றும் neet@nta.ac.in. என்ற இமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த ஹால் டிக்கெட்டில் தேர்வுகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நீட் தேர்வு எழுத வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். ஹால்டிக்கெட் உடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டை இருந்தால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.
» நீட் விலக்கு சட்டம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டதா? -தமிழக அரசு விளக்க வேண்டும் - ராமதாஸ்
முகக்கவசம் அணியாமல் வரும் தேர்வர்களுக்கு N95 முகக்கவசம் வழங்கப்படும். வெப்பநிலை பரிசோதனைக்குப் பின்னரே தேர்வர்கள் அனுமதிக்கப்படுவார்கள். வெப்பநிலை அதிகமாக உள்ள தேர்வர்கள் தனி அறையில் அமர்ந்து தேர்வு எழுதலாம்.
தேர்வு முடிந்த உடன் ஹால் டிக்கெட்டையும் தேர்வறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த தேர்வர்களின் விடைத்தாள் திருத்தப்படாது. 17-ம் தேதி பகல் 1.30 மணிக்கு மேல் வரும் எந்த தேர்வருக்கும், தேர்வு மையத்துக்குள் அனுமதியில்லை.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago