தருமபுரி: ஒகேனக்கல் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து கரையோரப் பகுதி மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
ஒகேனக்கல் காவிரியாற்றில் ஆண்டுதோறும் மே, ஜூன் மாதங்களில் திடீர் மழைக்கு ஏற்ப நீர்வரத்து அதிகரிக்கும் என்றாலும், ஜூலை மாதத்தில் தான் நீர்வரத்து அதிக அளவை எட்டும். அப்போது, நீர்வரத்து விநாடிக்கு 1 லட்சம் கனஅடியை எட்டும்போது ஒகேனக்கல், ஊட்டமலை, நாடார் கொட்டாய் உள்ளிட்ட காவிரி கரையோர கிராமங்களில் தண்டோரா மூலம் வெள்ள அபாயம் குறித்த எச்சரிக்கை செய்யப்படுவது வழக்கம்.
அதன்படி, ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று விநாடிக்கு 1 லட்சம் கன அடியைக் கடந்தது. இதையடுத்து, வருவாய்த்துறை சார்பில் ஒகேனக்கல் மற்றும் அருகிலுள்ள கிராமப் பகுதிகளில் நேற்று தண்டோரா மூலம் வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கை செய்யப்பட்டது.
பொதுமக்கள் ஆற்றோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம், ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ முயற்சிக்க வேண்டாம், கால் நடைகளை ஆற்றோரப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என தண்டோரா மூலம் எச்சரிக்கை செய்யப்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago