வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைப்பு குறித்து ஆகஸ்டில் அனைத்துக் கட்சி கூட்டம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: வாக்காளர் அட்டையுடன் ஆதார்இணைப்பு தொடர்பாக ஆகஸ்ட் மாதம் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.

மாவட்ட தேர்தல் அதிகாரிகளாக உள்ள ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக ஜூலை 6-ம் தேதி ஆலோசனை நடத்திய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் அளித்த அறிவுறுத்தல்களை தெரிவித்தார்.

அதன்படி, ஆகஸ்ட் 1-ம் தேதிமுதல் இதற்கான பணிகள் தொடங்கஉள்ளன. வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ள வாக்காளர்கள், ஆதார் எண்ணை 6-பி என்றவிண்ணப்பத்தின் மூலம் வாக்குப்பதிவு அலுவலரிடம் அளிக்கலாம். இதற்காக வாக்குப்பதிவு அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று, விவரங்களைப் பெற உள்ளனர்.

இதுகுறித்து சத்யபிரத சாஹூ கூறியதாவது:

கட்டாயப்படுத்தக் கூடாது

ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கப்படும் இந்தப் பணியை அடுத்த ஆண்டு மார்ச் 31-க்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரட்டைப் பதிவு, பல இடங்களில் பதிவு என குழப்பங்கள் ஏற்படுவதை தடுக்கவே இந்த நடைமுறை.

ஆதார் அல்லது அந்தப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதேனும் ஒரு ஆதாரத்தை அளிக்கலாம். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ஆதாரை அளிக்க வேண்டும்என யாரையும் கட்டாயப்படுத் தக் கூடாது என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது.

இதுதவிர, ஆகஸ்ட் 1-ம் தேதிமுதல் தொடங்கப்படும் இப்பணிகள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும்.

அத்துடன் மாநில அளவில் தலைமை தேர்தல் அதிகாரியும், மாவட்ட அளவில் மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தி, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு இதுகுறித்து அறிவுறுத்தி, அவர்கள் கருத்துகளையும் பெற தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி யுள்ளது. இதன் அடிப்படையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.

மேலும், செப்டம்பர் மாதம் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் வழக்கம்போல் தொடங்கும். அப்போது, நடத்தப்படும் சிறப்பு முகாம்களிலும் இந்த 6-பி படிவம் பெறப்பட்டு, ஆதார் இணைக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

15 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்