கும்மிடிப்பூண்டி/தாம்பரம்: கும்மிடிப்பூண்டியில் விஷவாயு தாக்கி கூலி தொழிலாளியும் தாம்பரத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தில் தண்ணீர் தொட்டியில் விழுந்து ஊழியரும் இறந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிட்கோ தொழிற்பேட்டையில் தனியார் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் வெளிபுறத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில் அடைப்புகள் இருந்தன.
அதனை அகற்றும் பணியில் நேற்று புது கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கரும்புகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த, கூலி தொழிலாளிகளான அரி (28), கோவிந்தன் ஆகியோர் நேற்றுமதியம் ஈடுபட்டனர். அப்போது தொட்டியில் இறங்கி, அடைப்பை அகற்றிக் கொண்டிருந்த அரி, விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தார்.
இதையடுத்து, சிகிச்சைக்காக கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்களின் பரிசோதனையில் அவர் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து, கும்மிடிப்பூண்டி சிட்கோ போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஊழியர் மரணம்
தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்துார் மணவாளன் நகரைச் சேர்ந்தவர், நமச்சிவாயம் (58). இவர், பழைய தாம்பரத்தில் உள்ள தாம்பரம் மாநகராட்சியின் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் குடிநீர் திறந்துவிடும் பணிசெய்து வந்தார்.
குடிப்பழக்கம் கொண்ட அவர் நேற்று முன்தினம் காலை வீட்டில் இருந்து வேலைக்குச் சென்றவர், அதன்பிறகு வீடு திருமபவில்லை. அவரைத் தேடி மாநகராட்சி ஊழியர் அசோக்குமார் சென்றபோது கீழ்நிலை நீர்தேக்க குடிநீர் தொட்டியில் நமச்சிவாயம் தவறி விழுந்து இறந்து கிடந்தது தெரிந்தது. இதையறிந்து தாம்பரம் போலீஸார் வந்தனர்.
பொதுவாக இரவு நேரங்களில் மாநகராட்சியின் குடிநீர் தொட்டிகள் மூடப்பட்டு, காவலாளிகள் மட்டுமே அங்கு பணியில் இருக்க வேண்டும். ஆனால் அவை முறையாக பின்பற்றப்படுவதில்லை.
இதனால் பலர் குடிபோதையில் அத்துமீறி நுழைகின்றனர். இதுவே தற்போது நமச்சிவாயம் இறப்புக்கு காரணமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து தாம்பரம் போலீஸார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
11 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago