“இப்போதைக்கு தகவல் தர முடியாது” - நீட் மசோதா குறித்த ஆர்டிஐ மனுவிற்கு ஆளுநர் மாளிகை பதில்

By செய்திப்பிரிவு

சென்னை: நீட் விலக்கு மசோதாவானது சம்பந்தப்பட்ட அதிகாரியின் பரிசீலனையில் உள்ள நிலையில், அதுகுறித்து தகவல் தெரிவிக்க முடியாது என்று தகவல் அறியும் உரிமை சட்ட மனுவிற்கு ஆளுநர் மாளிகை பதில் அளித்துள்ளது.

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் ‘தமிழ்நாடு இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான சட்டம்’ தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து குடியரசு தலைவரின் ஒப்புதலைப் பெற ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறும் வகையில், மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

இந்நிலையில், நீட் விலக்கு மசோதாவின் நிலை தொடர்பான தகவலை அளிக்க வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அனுப்பி இருந்தார்.

இதற்கு கடந்த ஜூலை 11-ம் தேதி ஆளுநர் மாளிகை சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. இந்த பதிலில், "மசோதா, சம்பந்தப்பட்ட அதிகாரியின் பரிசீலனையில் உள்ளது. அதனால் கோரியத் தகவலைத் தெரிவிக்க இயலாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்