சென்னை: தற்காலிக ஆசிரியர்களை 20ம் தேதிக்குள் பணியில் சேர்க்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களை, பள்ளி மேலாண்மைக் குழு மூலம், தொகுப்பூதியத்தில், தற்காலிக அடிப்படையில் நிரப்புமாறு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது. இதற்கு பட்டதாரிகள், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு கட்சி, அமைப்புகள் சார்பில் கடும் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன. இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தற்காலிக ஆசிரியர்களை 20ம் தேதிக்குள் பணியில் சேர்க்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக் கல்வி துறை ஆணையர் தடை விதிக்கப்படாத 23 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் முழு விவரம்:
விண்ணப்பங்களை நாளை மாலைக்குள் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
» ஆண்டிபட்டி அருகே கோயில் மண்டபத்தை கையகப்படுத்திய அறநிலையத் துறை
» ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி திரண்ட மக்கள்: ஆதரவாளர்கள் 43 பேர் திடீர் கைது
தேர்வுக் குழு 15ம் தேதிக்குள் தகுதியான நபர்களை தேர்வு செய்ய வேண்டும்.
தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை 16ம் தேதி முதன்மை கல்வி அலுவலருக்கு அனுப்ப வேண்டும்.
இந்த பட்டியலுக்கு 18ம் தேதி முதன்மை கல்வி அலுவலர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
19ம் தேதி பள்ளி மேலாண்மை குழுவின் ஒப்புதலை பெற வேண்டும்.
20ம் தேதி மாலைக்குள் நியமனம் பெற்றவரை பணியில் சேர்க்க வேண்டும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago