‘ஒற்றைத் தலைமை தேவை’ - அதிமுக பொதுக்குழு 16 தீர்மானங்களின் முக்கிய அம்சங்கள்
சென்னை: ஒற்றைத் தலைமை தேவை, இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பு, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா வழங்க வலியுறுத்தல், திமுகவுக்கு கண்டனங்கள் உள்ளிட்ட 16 தீர்மானங்கள், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.
அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்களின் முக்கிய அம்சங்கள்:
- அமைப்புத் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தல்.
- தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்துதல்.
- அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டைத் தலைமையை ரத்து செய்து, கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படும் பொதுச் செயலாளர் பொறுப்பு குறித்து விவாதித்து முடிவு.
- அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பொறுப்பை உருவாக்குவது.
- அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு
- அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியீடு
- அதிமுக எழுச்சி பெற ஒற்றைத் தலைமை தேவை
- எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சியின் சாதனைகளும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்பட்ட அரசின் வரலாற்று வெற்றிகளுக்கும் பாராட்டு
- அதிமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களை ரத்து செய்யும் திமுக அரசிற்கு கண்டனம்.
- சட்டம் - ஒழுங்கை பேணிக் காக்க தவறிய திமுக அரசுக்கு கண்டனம்
- விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத திமுக அரசுக்கு கண்டனம்
- மேகதாது அணை கட்டும் முயற்சியை தடுத்து நிறுத்த மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துதல்.
- இலங்கைத் தமிழர் நலன் காக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துதல்
- அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக அரசுக்கு வலியுறுத்தல்.
- நெசவாளர் துயர் துடைக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துதல்.
- தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அரசியல் காழ்புணர்ச்சியோடு அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடும் திமுக அரசுக்கு கண்டனம்.