சென்னை: தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் நடைபெற்ற 31-வதுசிறப்பு மெகா முகாமில் 17.55 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நாடுமுழுவதும் தடுப்பூசி போடும் பணிகடந்த 2021 ஜன.16-ம் தேதி தொடங்கியது. தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.
சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் மற்றும் 2 தவணை செலுத்தி 6 மாதம் நிறைவடைந்த 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசி அரசு சார்பில் இலவசமாக போடப்படுகிறது. 2 தவணை செலுத்தி 6 மாதம் நிறைவடைந்த 18-59 வயதினருக்கு தனியாரில் கட்டணத்தில் பூஸ்டர் தவணை தடுப்பூசி போடப்படுகிறது.
அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி போடும் நோக்கில், தமிழகத்தில் 50 ஆயிரம் இடங்களில் சனிக்கிழமைதோறும் மெகா முகாம்நடத்தப்பட்டது. முதல் தவணை தடுப்பூசி 90 சதவீதம் பேருக்குமேல் போடப்பட்டதால், வாராந்திர முகாம் நிறுத்தப்பட்டது.
» IND vs ENG | சூர்யகுமாரின் அபார சதம் வீண்: இங்கிலாந்து வெற்றி
» 2022 மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை | ஸ்பெயினுக்கு எதிராக தோல்வி; காலிறுதி வாய்ப்பை இழந்தது இந்தியா
இந்த நிலையில், கரோனா பரவல் அதிகரித்ததால் மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் நடத்த தமிழக அரசு முடிவு செய்தது.கடந்த மே 8, ஜூன் 12 ஆகிய நாட்களில் 1 லட்சம் இடங்களில் சிறப்பு மெகா முகாம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் 31-வதுசிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பள்ளிகள், ஊராட்சி, நகராட்சி அலுவலகங்கள், பேருந்து, ரயில் நிலையங்கள், பூங்காக்கள் என மக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களிலும் முகாம்கள் நடத்தப்பட்டன. சென்னையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடப்பட்டது.
இதுவரை முதல் 2 தவணைகள், பூஸ்டர் போட்டுக் கொள்ளாத சுமார் 1.45 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற முகாம்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் நடந்த மெகா முகாம்களைசுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் உடன் இருந்தார். தமிழகம் முழுவதும் நடந்த சிறப்பு மெகா முகாமில் 17.55 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது.
தடுப்பூசி முகாம் பணியில்ஈடுபட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனால், வழக்கமான தடுப்பூசி மையங்கள் இன்றுசெயல்படாது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டும் இன்று தடுப்பூசி போடும் பணி நடைபெறும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
31 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago