சென்னையில் பரவலாக மழை

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் பல இடங்களில் நேற்று மாலையில் மிதமான மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகரில் பல இடங்களில் கடந்த சில நாட்களாக மாலை, இரவு வேளையில் லேசானது முதல் மிதமான மழை பெய்கிறது இதுபோல, சென்னையில் பல இடங்களில் நேற்றும் பரவலாக மழை பெய்தது.

பகலில் ஓரளவு வானம் மேகமூட்டமாக இருந்தது. மதியத்துக்கு பிறகு, மேகக்கூட்டங்கள் திரண்டு, மாலையில் மழை பெய்யத் தொடங்கியது. அண்ணாசாலை, நுங்கம்பாக்கம், அண்ணாநகர், கோயம்பேடு, வேப்பேரி, எழும்பூர் உட்பட பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. இதுபோல, புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.

சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறும்போது, “மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, சென்னையில் மழை பெய்தது. தென்மேற்கு பருவமழை காலத்தில் பெய்யக்கூடிய வழக்கமான மழைதான். பலத்த மழைக்கு வாய்ப்பு இல்லை” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்