தமிழகத்திலுள்ள சுற்றுலாத் தலங்கள் குறித்த முழு விவரங்களை தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 8 மொழிகளில் அறிந்து கொள்ளும் வகையில் ‘மொபைல் அப்ளிகேஷன்’ (செயலி) வடி வமைக்கப்பட உள்ளது.
ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி உள்ளிட்ட அழகிய மலை பிரதேசங்கள், குற்றாலம், ஒகேனக்கல், திற்பரப்பு, ஆகாய கங்கை போன்ற நீர்வீழ்ச்சிகள், தஞ்சை பெரிய கோயில், தாரா சுரம் ஐராவதீஸ்வரர் கோயில், கங்கைகொண்ட சோழபுரம், மாமல்லபுரம் உள்ளிட்ட பாரம் பரிய சின்னங்கள், மதுரை மீனாட்சி யம்மன், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், சிதம்பரம் நடராஜர் உள்ளிட்ட உலகப்புகழ் பெற்ற வழிபாட்டுத் தலங்களைக் கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. எனவே, இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் இங்கு சுற்றுலா வந்து செல்கின்றனர்.
இவர்களுக்கு மாநிலத்திலுள்ள சுற்றுலாத் தலங்கள் குறித்து விளக்குவதற்காக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் நவீன தொழில்நுட்ப வசதி களுடன் கூடிய புதிய ‘மொபைல் அப்ளிகேஷன்’ வெளியிட திட்டமிடப் பட்டுள்ளது. ஆன்டிராய்டு, ஐ போன் மற்றும் விண்டோஸ் போன்களில் பயன்படுத்தும் வகையில் இது வடிவமைக்கப்படுகிறது. இதி லுள்ள விவரங்களை தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, பிரெஞ்ச் ஆகிய 8 மொழிகளில் படிப்பதற்கான வசதியும் செய்து தரப்பட உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரிகள் கூறியதாவது:
சுற்றுலாப் பயணிகளுக்கு வழி காட்டும் வகையில் தற்போது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் >www.tamilnadutourism.org என்ற இணையதளம் செயல் பட்டு வருகிறது. இதிலுள்ள தகவல் களை தமிழ், ஆங்கிலம், பிரெஞ்ச் ஆகிய 3 மொழிகளில் மட்டுமே படிக்க முடியும் என்பதால், பக்கத்து மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் வசிப்பவர் களுக்குக்கூட சிரமம் ஏற்படுகிறது. எனவே, இந்த இணைய பக்கத் தைப் புதுப்பிக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.
அத்துடன், ஸ்மார்ட் போன்கள் மூலம் தமிழக சுற்றுலாத் தலங்கள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் மொபைல் அப்ளிகேஷன் வடிவமைப்பதற் கான பூர்வாங்க பணிகளும் தொடங்கியுள்ளன.
இதில், தமிழகத்திலுள்ள முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், கோயில்கள், மலைப் பிரதேசங் கள், வன உயிரினங்கள் அதிகம் வாழும் பகுதிகள், கடற்கரை கள், நீர்வீழ்ச்சிகள், அருங்காட்சி யகங்கள், பூங்காக்கள் அமைந் துள்ள இடங்களும், அவை குறித்த முழு விவரங்களும் இடம் பெற்றிருக்கும். மேலும், இசை, நடனம், திருவிழாக்கள், நிகழ்ச்சி கள் நடைபெறும் சிறப்பு வாய்ந்த இடங்களின் விவரங்களும், படங் களும் அதில் இடம்பெற்றிருக்கும்.
இது தவிர யோகா, ஆயுர் வேதம் உள்ளிட்ட மருத்துவச் சுற்றுலாவுக்கான இடங்கள், சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் ஒவ்வொரு நகரிலும் நடத்தப்படும் விடுதிகள், உணவகங்கள், அவற் றின் தொடர்பு முகவரிகள், பேக் கேஜ் சுற்றுலா திட்ட விவரங்களும் அதில் குறிப்பிடப்படும்.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விடுதிகளிலும் முன்பதிவு செய்வதற்கான வசதிகளும் இந்த அப்ளிகேஷனில் செய்து தரப்படும். மேலும், தாங்கள் இருக்கும் இடத்திலிருந்து, பயணிக்கத் திட்ட மிடும் சுற்றுலாத் தலத்துக்கு விமானம், ரயில் மற்றும் சாலை வழியாக செல்வதற்கு ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் வழிகாட்டுவதற்கான வசதிகளும் செய்து தரப்பட உள்ளன.
இந்த அப்ளிகேஷனில் உள்ள ‘என்னைச் சுற்றி’ என்ற உட்பிரிவுக் குள் நுழைந்தால், சம்பந்தப்பட்ட நபர் இருக்கும் இடத்திலிருந்து, 25 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் உள்ள முக்கிய இடங்கள், சுற்றுலாத் தலங்களின் விவரங்களை அறிய முடியும்.
அத்துடன் சுற்றுலா வந்துள்ள இடங்களை ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் எளிதில் பகிர்வதற்கான வசதியும் செய்து தரப்பட உள்ளது. இதற்கான பணிகள் அனைத்தும் நிறைவுற்று, இன்னும் ஒரு சில மாதங்களில் இந்த அப்ளிகேஷன் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு உள்ளது என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
30 mins ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
7 hours ago