சென்னை: ரயில் நிலையங்களில் உள்ளூர் பொருட்களை விற்பனை செய்யும் ‘ஒரு நிலையம், ஒரு பொருள்’ திட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வேயில் உள்ள ரயில் நிலையங்களில் இதுவரை ரூ.1.20 கோடிக்கு உள்ளூர் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டள்ளன.
பிரபலமான உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்க அருகில் உள்ள ரயில் நிலையங்களில் 'ஒரு நிலையம், ஒரு பொருள்' திட்டத்தின் கீழ் விற்பனை நிலையங்களை ரயில்வே அமைத்து வருகிறது. இதன்படி நாடு முழுதும் 5,000 ரயில் நிலையங்களில் இந்த விற்பனைக்கு அனுமதி அளிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ஆறு கோட்டங்களில், அந்தந்தப் பகுதிகளில் பிரபலமாக இருக்கும் பொருட்களை தேர்வு செய்யப்பட்டு மார்ச் முதல் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் காஞ்சி பட்டுசேலை, மதுரையில் சுங்குடி சேலை, திருநெல்வேலியில் பனைப் பொருட்கள், தஞ்சாவூரில் பொம்மைகள், திருவனந்தபுரத்தில் கைவினை பொருட்கள், திருசெந்தூர் ரயில் நிலையத்தில் பனை பொருட்கள், பழனி பஞ்சாமிர்தம், திருவில்லிபுத்தூர் பால்கோவா உள்ளிட்ட பனைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
» செஞ்சியை சேர்ந்த வாசன், பூஜாவுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
» சென்னை விமான நிலைய புதிய வாகன நிறுத்தத்தில் மின்சார வாகன சார்ஜிங் வசதி
இந்தத் திட்டத்தின் படி தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் இதுவரை ரூ.1.20 கோடிக்கு உள்ளூர் பொருட்கள் விற்பனையாகி உள்ளது. இதில் காஞ்சிப் பட்டு, மதுரையில் சுங்குடி சேலைகள், நெல்லையில் மற்றும் திருச்செந்தூரில் பனைப் பொருட்கள் ஆகிய பொருட்கள் அதிக அளவு விற்பனையாகி உள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
40 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago