'பனகல் அரசர் குறித்த புத்தகம்தான் கலைஞர் கருணாநிதிக்கு அரசியல் அரிச்சுவடி' - முதல்வர் ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

சென்னை: 'பனகல் அரசர்' குறித்த புத்தகம்தான் திருவாரூர் பள்ளியில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு அரசியல் அரிச்சுவடியாகி சுயமரியாதை இயக்கத்தை நோக்கி ஈர்த்தது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த பனகல் அரசரின் பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "திராவிட மாடலின் முதல் அத்தியாயத்தைத் தொடங்கி வைத்த நீதிக்கட்சியின் சென்னை மாகாண முதலமைச்சர் பனகல் அரசர் அவர்களின் பிறந்தநாள் இன்று. சமூகநீதிக்கு அடித்தளமிட்ட #CommunalGO-க்கு வழியமைத்தவர். வழிபாட்டு உரிமையைக் காக்கின்ற வகையில் இந்து அறநிலையச் சட்டத்தை நிறைவேற்றியவர்.

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான உத்தரவுகளைப் பிறப்பித்தவர். பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் வழங்கி அதிகாரத்தில் பங்கேற்கச் செய்தவர். உள்கட்டமைப்புகளை மேம்படுத்தியவர். மருத்துவக் கல்வி - வேலைவாய்ப்புகளில் அனைத்து சமுதாயத்தினரும் பங்கேற்கத் தடையாக இருந்தவற்றைத் தகர்த்தெறிந்தவர்.

பனகல் அரசர்' குறித்த புத்தகம்தான் திருவாரூர் பள்ளியில் தலைவர் கலைஞருக்கு அரசியல் அரிச்சுவடியாகி சுயமரியாதை இயக்கத்தை நோக்கி ஈர்த்தது.மக்களாட்சியின் காவலராகச் செயற்கரிய செய்த பனகல் அரசரின் செயல்களைப் போற்றி, எல்லாருக்கும் எல்லாம் என்ற இலக்குடன் பயணிப்போம்!" இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

38 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்