குப்பை தரம் பிரிப்பு சவால்: துணை மேயர், ஆணையருக்கு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அழைப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: குப்பை தரம் பிரித்து வழங்கும் சவாலில் கலந்து கொள்ள துணை மேயர் மற்றும் ஆணையருக்கு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அழைப்பு விடுத்துள்ளார்.

குப்பைகளை தரம் பிரித்து அளிக்காவிடில் ரூ.100 அபராதம் விதிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி சார்பில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குப்பை தரம் பிரித்து வழங்கும் சவாலில் கலந்து கொள்ள துணை மேயர் மற்றும் ஆணையருக்கு சென்னை மாநகராட்சி மேயர் பிரியா அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்த தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், " எங்கள் வீட்டு குப்பையை, மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்குகிறேன். என் குப்பை, எனது பொறுப்பு என்ற உணர்வோடு நமது சென்னை மக்கள் அனைவரும் தங்களது வீட்டு குப்பையை, மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என பிரித்து கொடுக்க வேண்டும்.

இந்த மாபெரும் குப்பை தரம் பிரிக்கும் சவாலில் துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் ககன் தீப் சிங் பேடி, தலைமை பொறியாளர் மகேசன் ஆகியோரை பங்கு கொள்ள அழைக்கிறேன்.நம்ம சென்னை நம்ம பொறுப்பு !" இவ்வாறு அந்த பதிவில் அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE