புதுச்சேரி: நடுக்கடலில் படகு பழுதாகி தவித்த 9 மீனவர்களை இந்திய கடலோர காவல்படையினர் மீட்டு இன்று கரைக்கு அழைத்து வந்தனர். அவர்களின் படகையும் இழுந்து வந்து கரை சேர்த்தனர்.
புதுச்சேரி தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஹத்தீம் பாஷா, கதிரேசன், சரண்ராஜ், அபின், தர்மலிங்கம், மணியப்பன், சுரேஷ், குமணன், முருகன் ஆகிய 9 மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றனர்.
மரக்காணம் தாண்டி சசிகோலா தோட்டம் பகுதியில் கடலில் 3 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடலில் படகு கடந்த 5ம் தேதி பழுதானது. இதையடுத்து மீனவர்கள் படகை பழுதை நீக்க முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை.
» அதிமுக குழப்பத்துக்கும், லஞ்ச ஒழிப்பு சோதனைக்கும் சம்பந்தமில்லை: அமைச்சர் ரகுபதி
» மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்: வங்கிகளுக்கு மநீம வலியுறுத்தல்
இதையடுத்து மீன் வளத்துறைக்கு கடந்த 6ம் தேதி தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மீனவர்களை தேடத் தொடங்கினர்.
கடலில் படகு பழுதாகி தவித்த மீனவர்களை 7-ம் தேதி கண்டறிந்தனர். அதையடுத்து அவர்களுக்கு உணவு, தண்ணீர் தந்து படகை பழுது நீக்க முயற்சித்தனர். ஆனால், படகை சரி செய்ய முடியவில்லை. இதையடுத்து 9 மீனவர்களுடன் பழுதாகி நின்ற படகையும் கடலில் இழுத்து வந்து இன்று கரை சேர்ந்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago