ரூ.30 கோடியில் வள்ளுவர் கோட்டம் சீரமைக்கப்படும்: அமைச்சர் சாமிநாதன் தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டம் ரூ.30 கோடி செலவில் நவீன முறையில் விரைவில் சீரமைப்பு செய்யப்படும் என செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.

வள்ளுவர் கோட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ள சீரமைப்பு பணிகள் குறித்து செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் எழிலன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், "முன்னாள் முதல்வர் கருணாநிதியில் உருவாக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பிறகு சரியான முறையில் பராமரிப்பு இல்லாமல் இருந்தது. சமீபத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிக்க முதல்வர் ஸ்டாலின் வந்தபொழுது வள்ளுவர் கோட்டத்தில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தி இருந்தார்.

வள்ளுவர் கோட்டத்தை ரூ.30 கோடி ரூபாய் செலவில் சீரமைப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பொதுப் பணித்துறை சார்பில் இதற்காக பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

வள்ளுவர் கோட்டத்தில் உள்ள கலையரங்கம் குளிர்சாதன வசதியோடு நவீன முறையில் சீரமைப்பு செய்யப்பட்டு மீண்டும் இந்த அரங்கத்தில் நிகழ்ச்சிகள் நடத்தப்படும்" என்று அமைச்சர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

30 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்