சென்னை: சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான பின்னர், அம்மாணவர்கள் தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கு ஏதுவாக 5 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும் என்று தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்," இன்றுவரை சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தெரியாத ஒரு சூழல் நிலவுகிறது. எனவே சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்த மாணவர்கள் எங்கு விண்ணப்பிப்பது, எப்படி விண்ணப்பிப்பது என்று தெரியாமல் திணறிக்கொண்டுள்ளனர்.
எனவே அந்த மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு, அதன்பின்னர் 5 நாட்களுக்கு கல்லூரிகளில் சேர அந்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்காக அரசு, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கு ஏதுவாக, 5 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்படுகிறது.
எனவே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கின்ற கடைசி நாள் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளைப் பொருத்தே அமையும்.
» பக்ரீத் | புகழ்பெற்ற மோர்பாளையம் சந்தையில் ரூ.2 கோடி வரை ஆடுகள் விற்பனை
» சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 90 நாட்களில் நிறைவடையும்: அமைச்சர் கே.என்.நேரு
இதுவரை அரசு கலை கல்லூரிகளுக்கு 3 லட்சத்து 3 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழக அரசுத் தரப்பிலும், தேர்வு முடிவுகளை வெளியிடுமாறு சிபிஎஸ்இயிடம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த கால நீட்டிப்பு என்பது அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கும் பொருந்தும்.
அரசு கல்லூரிகளில் சேர மாணவர்கள் அதிகமான அளவில் விண்ணப்பித்திருப்பதால், ஏற்கெனவே இருந்த இடங்களைவிட 25 சதவீதம் அதிகமாக உயர்த்தப்படும். முன்னதாக 15 சதவீதமாக இருந்தது. கரோனா காலமாக இருந்ததால், கடந்தஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் 10 சதவீதம் உயர்த்தப்பட்டது, இந்த ஆண்டும் இது தொடரும். ஆசிரியர்களின் எண்ணிக்கை, உள்கட்டமைப்பு வசதி ஆகியவற்றின் அடிப்படையில்தான், மாணவர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படுகிறது.
அரசு கல்லூரிகளுக்கு விண்ணப்பித்திருக்கிற அனைத்து மாணவர்களுக்கும் இடம் கிடைப்பதற்கான முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்ளும்" என்று அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
37 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago