புதுக்கோட்டை: தேங்காய் விலை வீழ்ச்சியைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே தேங்காய் உடைக்கும் பேராட்டம் இன்று (ஜூலை 8) நடைபெற்றது.
தமிழ்நாடு தென்னை விவசாயிகள். சங்கம் மற்றும் அகில இந்திய தென்னை வளர்ப்போர் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்துக்கு தென்னை விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகி த.செல்வராஜ் தலைமை வகித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் த.செங்கோடன், நக்கீரர் தென்னை உற்பத்தியாளர் சங்க தலைவர் காமராஜ் விவசாயிகள்சங்க நிர்வாகிகள் பெரியசாமி, சிங்கமுத்து, உள்ளிட்டோர் பேசினர்.
''உரித்த தேங்காய் கிலோ ரூ.50-க்கும், கொப்பரை தேங்காய் கிலோ ரூ.150-க்கும் அரசு கொள்முதல் செய்ய வேண்டும். அங்கன்வாடிகளில் சமையலுக்கு தேங்காய் எண்ணெய்யை மட்டுமே பயன்படுத்த செய்ய வேண்டும்.
» திமுகவுக்கு எதிராக குரல் கொடுக்காமல் சுயநலத்திற்காக அதிமுகவை கூறுபோடுகிறார்கள்: சசிகலா
» தமிழகத்தை இரண்டாக பிரித்தாலும் இரண்டிலும் திமுக ஆட்சிதான்: அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு
பாமாயில் எண்ணெய் இறக்குமதியை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும். இந்தியா முழுவதும் தேங்காய் எண்ணெய்க்கு மத்திய, மாநில அரசுகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்'' என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
போராட்டத்தில் கலந்துகொண்டோர் தேங்காய்களை சாலையில் உடைத்து கோஷம் எழுப்பினர். முன்னதாக சிவன் கோயில் அருகாமையில் இருந்து போராட்டத்தில் நடைபெற்ற இடத்துக்கு ஊர்வலமாக வந்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago