திமுகவுக்கு எதிராக குரல் கொடுக்காமல் சுயநலத்திற்காக அதிமுகவை கூறுபோடுகிறார்கள்: சசிகலா

By செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் மக்களை சந்திப்பதற்காக சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகி றார். அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளவானூர் தொகுதிக்குட்பட்ட வானூர், திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு, ராமநாதபுரம், சே மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வேனில் இருந்தபடி நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் சசிகலா பேசியது:

ஜெயலலிதாவுடன் இருந்த நட்பு உண்மையானது; புனிதமா னது. நாங்கள் எண்ணங்களால், சிந்தனையால் ஒன்றுபட்டோம். அதனால்தான் இந்த இயக்கத்தை நம் அரசியல் எதிரிகள் பொறா மைப்படும் அளவுக்கு கொண்டு வர முடிந்தது. ஜெயலலிதாவை அப்புறப்படுத்த எடுத்து கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்தன. நாம் கூட்டணி இல்லாமல் வெற்றி பெற்றோம்.

தொடர் வெற்றிகளை பெற்ற இயக்கம், தற்போது தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. எத்தனையோ இன்னல்களை நானும், ஜெயலலிதாவும் அனுப வித்தோம். ஜெயலலிதாவை அரசி யலில் இருந்து அப்புறப்படுத்தி விடலாம் என்று அரசியல் எதிரிகள்போராடி தோற்று போனார்கள். இப்போது தனிப்பட்ட சுயநலத்திற்காக கட்சியை கூறுபோடுகி றார்கள். கட்சித் தலைமை என்பது சட்ட விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். ‘நான் பெரியவன், நீ பெரியவன்’ என்ற சண்டை கட்சியை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்கிறது என்று தொண்டர்கள் வருத்தப்படுகிறார்கள்.

எந்தக் கட்சிக்கு எதிராக எம் ஜி ஆர், ஜெயலலிதா இருவரும் பாடுபட்டனரோ, அந்தக் கட்சிக்கு எதிராக குரல் கொடுக்காமல் இப்போது உள்ளனர். 35 ஆண்டுகள் ஜெயலலிதாவுடன் பயணித்தவள் என்பதாலும், கட்சியின் மீது உள்ள அபிமானத்தாலும் ‘கட்சியின் தலைமையை ஏற்க வேண்டும்’ என்ற தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்றுதான் இப்போது உங்களை சந்தித்து வருகிறேன். உங்களின் ஆதரவு எனக்கு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. என் இறுதி மூச்சுவரை தமிழக மக்களுக்காக பாடுபடுவேன்.

திமுக ஆட்சிக்கு வந்த 13 மாதங்களில் திமுகவினரின் மக்கள் விரோத செயல்களால், மக்கள் நிம்மதியின்றி வாழ்கின்றனர். அறிவிக்கப்படாத மின் வெட்டால் அனைவரும் பாதிக்கப்படுகிறார்கள். திமுகவை மக்கள் நம்ப வில்லை. மக்கள் திமுகவை விட்டு விலக ஆரம்பித்து விட்டார்கள்” என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE