தமிழகத்தை இரண்டாக பிரித்தாலும் இரண்டிலும் திமுக ஆட்சிதான்: அமைச்சர் ஐ.பெரியசாமி பேச்சு

By செய்திப்பிரிவு

தமிழகத்தை இரண்டாகப் பிரித்தாலும், இரண்டிலும் திமுகதான் ஆட்சி செய்யும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தொகுதியிலுள்ள கன்னிவாடியில் அரசு கலை அறிவியல் கல்லூரியை சென்னை யிலிருந்தபடி காணொலி மூலம் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து இக் கல்லூரி தற்காலிகமாக செயல்பட உள்ள கன்னிவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியர் ச.விசாகன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ஜாஸ்ஏஞ்சலின் வரவேற்றார். ப.வேலுச்சாமி எம்.பி., ரெட்டியார்சத்திரம் ஒன்றியத் தலைவர் சிவகுருசாமி, கோட்டாட்சியர் பிரேம்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், அமைச்சர் ஐ.பெரியசாமி குத்துவிளக்கேற்றி பேசியதாவது: தமிழகத்தில் ஆளுங்கட்சி தொகுதிகள், எதிர்க்கட்சி தொகுதிகள் என்று எந்தவிதமான பாரபட்சமும் இன்றி அனைத்து பின்தங்கிய பகுதிகளிலும் முதல்வர் ஸ்டா லின் கல்லூரிகளை திறந்து வைத்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்துக்கு மக்கள்தொகை அடிப்படையில் கூடுதலாக ஒரு அரசு மருத்துவக் கல்லூரி அமைத்து தருமாறு முதல்வரிடம் வேண்டுகோள் விடுக்க உள் ளேன் என்று பேசினார்.

பின்னர் அவரிடம் செய்தி யாளர்கள், தமிழகத்தை இரண்டாகப் பிரிப்பது தொடர்பாக பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்த கருத்து குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர், "தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்பது நயினார் நாகேந்திரனின் ஆசையாக இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டை இரண் டாகப் பிரித்தாலும் திமுகதான் இரண்டிலும் ஆட்சி செய்யும் என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE