சேலம்: மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள தடகள வீராங்கனை பி.டி.உஷா சேலம் அரியானூரில் உள்ள தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நடந்த மாரத்தான் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: 1977-ம் ஆண்டு முதல் ஓட்டப்பந்தயங்களில் கலந்து கொண்டு ஓடி வருகிறேன். ஓட்டப்பந்தயம், உடற்பயிற்சியில் ஈடுபடுவது உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது.
எனக்கு மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவி கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பெண்என்பதால் எனக்கு எம்பி பதவிகிடைத்ததாக கருத முடியாது.
விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அளிக்கப்பட்ட கவுரவமாக கருதுகிறேன். ஒலிம்பிக் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க செல்லும் தடகள வீரர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து ஊக்கப்படுத்தி வருகிறார்.
விளையாட்டுத் துறைக்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டு, வீரர்களுக்கு தேவையான வசதிகள் அனைத்தும் அரசு செய்து கொடுக்கிறது.
இதன்மூலமாக கூடுதல் பதக்கங்களை இந்தியா பெற முடியும். விளையாட்டு வீரர்கள் மேலும் பல சாதனைகளை படைப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. விளையாட்டுத் துறையை மேம்படுத்த மாநிலங்களவையில் குரல் கொடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
27 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago