சென்னை: தமிழகத்தில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, சேமிப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்பாட்டுக்குதடை விதிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வோர், பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்த விவரங்களை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய இணையதளத்தில் (www.tnpcb.gov.in) தெரிந்து கொள்ளலாம்.
இந்நிலையில், பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த, மாசுக் கட்டுப்பாடு வாரியம் பிரத்யேக கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. அதை 1800 425 6750 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த கட்டுப்பாட்டு அறை அனைத்து வேலை நாட்களிலும், ஜூலை 31-ம்தேதி வரை காலை 9.30 முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் தடை குறித்த விவரங்கள், உதவி, வழிகாட்டுதல் மற்றும் தகவல்களை இந்த கட்டுப்பாட்டு அறை மூலம் அறியலாம்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago