மடிப்பாக்கம் பாதாள சாக்கடைத் திட்ட அவமதிப்பு வழக்கு: 5 ஐஏஎஸ் அதிகாரிகள் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினர்

By செய்திப்பிரிவு

சென்னை: மடிப்பாக்கம் பாதாள சாக்கடைத் திட்ட அவமதிப்பு வழக்கில் 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உயர் நீதிமன்றத்தில் நேற்று நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரியதையடுத்து இந்த வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்துள்ளனர்.

சென்னை மடிப்பாக்கம் பகுதியில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை தமிழக அரசு அதிகாரிகள் குறிப்பிட்ட காலத்துக்குள் மேற்கொள்ளவில்லை எனக்கூறி அய்யம்பெருமாள் என்பவர் உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு, மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்த கால அட்டவணை வகுக்கும் தமிழக அரசு அதை குறிப்பிட்ட நேரத்துக்குள் செய்து முடிப்பதில்லை என அதிருப்தி தெரிவித்து சம்பந்தப்பட்ட துறைச் செயலாளர்கள் ஜூலை 7 -ம் தேதி(நேற்று) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அந்த அதிகாரிகளுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் எனவும் எச்சரித்து விசாரணையை தள்ளி வைத்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றும் வாரிய செயலாளராக கடந்த 2019 முதல் 2021 வரை பதவி வகித்த ஐஏஎஸ் அதிகாரிகளான ஹர்மந்தர் சிங், தற்போது இந்த பதவியை வகிக்கும் ஷி்வ்தாஸ் மீனா மற்றும் இந்த காலகட்டத்தில் நிர்வாக இயக்குநர்களாக பணியாற்றிய டி.என்.ஹரிஹரன், சி.விஜயராஜ்குமார், தற்போது நிர்வாக இயக்குநராக பணியாற்றி வரும் கிர்லோஷ் குமார் ஆகியோர் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினர்.

பின்னர் இவர்கள் சார்பி்ல் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி மடிப்பாக்கம் பகுதியில் பாதாள சாக்கடைத் திட்டம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டு விட்டதாகக்கூறி அதற்கான புகைப்படங்களைத் தாக்கல் செய்தார்.

மேலும், இப்பணிகள் 30 வாரத்துக்குள் முடிக்கப்படும், என்றார்.

அதையடுத்து இந்த அவமதிப்பு வழக்கை முடித்து வைத்த நீதிபதிகள், “உங்களை இங்கு வரவழைக்க வேண்டும் என்பது எங்களது விருப்பம் இல்லை. மக்களுக்கான திட்டத்தை உருவாக்கி அதை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும் என திட்டமிடும் நீங்கள், அதை ஏன் குறிப்பிட்ட காலத்துக்குள் முறையாக மேற்கொள்வதில்லை.

எந்த திட்டமாக இருந்தாலும் கீழ் நிலையில் உள்ள அதிகாரிகளிடம் வாரம் ஒருமுறையாவது ஆலோசனை செய்ய வேண்டும். மீண்டும் இதுதொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வரக்கூடாது” எனக்கூறி இந்த வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்