நீதிமன்ற உத்தரவுகளை குறித்த காலத்தில் அமல்படுத்த அதிகாரிகள், ஆட்சியருக்கு கடிதம்: தமிழக அரசு தகவல்

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: நீதிமன்ற உத்தரவுகளை குறித்த காலத்துக்குள் அமல்படுத்த வேண்டும் என அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தி, தலைமைச் செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

நீதிமன்ற உத்தரவுகளை அரசு குறித்த காலத்தில் அமல்படுத்தினால், ஏராளமான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தவிர்க்கலாம் என்று வழக்கு விசாரணை ஒன்றில் தலைமை நீதிபதி அமர்வு அறிவுறுத்தியிருந்தது.
மேலும், நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த முடியாவிட்டால் மேல் முறையீடு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், "நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தவிர்க்க, நீதிமன்ற உத்தரவுகளை குறித்த காலத்தில் அமல்படுத்த வேண்டும் எனவும், இல்லாவிட்டால் மேல் முறையீடு செய்ய வேண்டும் எனவும் அனைத்து துறை அதிகாரிகளுக்கும், அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் அனுப்பியுள்ளதாக தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், தலைமை நீதிபதி அமர்வில் தெரிவித்தார்.

மேலும், அந்தக் கடிதத்தின் நகலையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இதனை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வு ஏற்றுக் கொண்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்