செங்கம்: தடராப்பட்டு அரசினர் உயர்நிலைப் பள்ளியில் வகுப்புறை யின் மேற்கூரை சிமென்ட் பூச்சு விழுந்ததால் 3 மாணவர்கள் உட்பட 4 பேர் காயமடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட தடராப்பட்டு பகுதியில் அரசினர் உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் வழக்கமான வகுப்புகள் நேற்று நடைபெற்ற நிலையில், 6-ம் வகுப்பு மாணவர்கள் படிக்கும் வகுப்பறையின் மேற்கூரை சிமென்ட் பூச்சு திடீரென விழுந்தது. இதில், மாணவர்கள் ஜனார்தனன், தருண்குமார் மற்றும் முகேஷ் ஆகிய மாணவர்களுடன், உடற்கல்வி ஆசிரியர் தினகரன் என்பவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, பள்ளி மாணவர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் தினகரன் ஆகியோரை தண்டராம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில், முகேஷ் என்ற மாணவரை மட்டும் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், தண்டராம்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களை சட்டப்பேரவை உறுப்பினர் மு.பெ.கிரி விசாரித்து ஆறுதல் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
25 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago