சென்னை: மாநிலக் கல்லூரியில் கலைஞர் அரங்கம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
சென்னை மாநிலக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, "மறைந்த முதல்வர் கருணாநிதி பெயரில் மாநிலக் கல்லூரியில் 2,000 பேர் அமரும் வகையில் கலைஞர் அரங்கம் அமைக்கப்படும். மேலும், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்லூரி வளாகத்தில் விடுதி அமைத்து தரப்படும்” என்று அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து கலைஞர் அரங்கம் மற்றும் மாற்றுத் திறனாளிக்கான விடுதி அமைப்பது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி மாநிலக் கல்லூரி வளாகத்தில் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அரங்கம், விடுதி அமைப்பதற்கு தேவைப்படும் இடம், நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசித்து பணி தொடக்கம்
அதன்பின் அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறும்போது, “முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்புகளை துரிதமாக நிறைவேற்றும் விதமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கலைஞர் அரங்கம் அமைப்பது குறித்து பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவுடன் ஆலோசித்து விரைவில் திட்டப்பணிகள் தொடங்கப்படும்” என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
58 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago