தருமபுரி: தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே விளை நிலங்களில் காட்டு யானைகள் நுழைந்ததால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
பென்னாகரம் வட்டம் வட்டுவனஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பவளந்தூர் கிராமத்தை ஒட்டி வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதி ஒகேனக்கல் மற்றும் கர்நாடகா மாநிலம் வரை நீள்வதால் இந்த வனத்துக்குள் யானைகள் அதிக அளவில் நடமாடுகின்றன.
கோடை காலம் உள்ளிட்ட நேரங்களில் இவ்வனப்பகுதியில் இருந்து அவ்வப்போது காட்டு யானைகள் வெளியேறி வனத்தை ஒட்டிய கிராமங்களிலும் விளை நிலங்களிலும் நுழைவது வழக்கம்.
அந்த வகையில், தற்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என 2 காட்டு யானைகள் பவளந்தூர் கிராமத்தை ஒட்டிய விளை நிலங்களில் நுழைந்துள்ளன.
இன்று (புதன்) காலை விளை நிலங்களில் நடமாடிய அந்த யானைகள் தற்போது அருகில் உள்ள வனப்பகுதிக்கு திரும்பிச் சென்று முகாமிட்டுள்ளன. அந்த யானைகள் கிராமங்களில் நுழையவும், விளை நிலங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தவும் வாய்ப்புள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
எனவே, வனத்துறையினர் யானைகளை அடர்வனப் பகுதிக்கு இடம்பெயரச் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago