சென்னை: சென்னையில் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிவதை கண்காணிக்க மண்டலம் வாரியாக குழுக்கள் அமைத்து சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சென்னையில் தினசரி கரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டி பதிவாகிவருகிறது.கடந்த 2 வாரங்களாக சென்னையில் கரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. இந்நிலையில், சென்னையில் பொதுமக்கள் அனைவரும் கட்டயாம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று நேற்று சென்னை மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டு இருந்தது. மேலும், முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபாராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதை கண்காணிக்க மண்டலம் வாரியாக 15 சிறப்பு கண்கானிப்புக் குழுக்கள் அமைத்து சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்தக் குழுவில் மாநகராட்சி மண்டல சுகாதார அலுவலர் தலைமயிலான குழுவில் 2 சுகாதார ஆய்வாளர் மற்றும் 2 தேசிய நகர்ப்புற நலவாழ்வு பணியாளர்களும் இருப்பார்கள்.
இவர்கள், சென்னையில் பொது இடங்களில் கரோனா தடுப்பு பாதுகாப்பு விதிகளை மக்கள் கடைப்படிக்கிறார்களா என தீவிரமாக கண்கானிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் திடீர் சோதனை நடத்தி, முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago