தற்காலிக ஆசிரியர் பணியிடத் துக்கு விண்ணப்பிக்க மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் திரண்ட ‘டெட்’ தேர்ச்சி பெற்றவர்களிடம் உயர் நீதிமன்ற இடைக்காலத் தடையால் விண்ணப்பங்கள் வாங்க அதி காரிகள் மறுத்தனர்.
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் காலிப் பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்பப் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது. இதற்கு ஆசிரியர்கள் சங்கங்கள் மற்றும் அனைத்து தரப்பிலும் எதிர்ப்பு எழுந்தது. உயர் நீதிமன்றக் கிளையும் தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு இடைக்காலத் தடை விதித்தது.
இதனிடையே பள்ளிக் கல்வித் துறை திருத்தப்பட்ட வழிகாட்டு தல்களை வெளியிட்டது. அதில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களையே தற் காலிக ஆசிரியர்களாக நியமிக்க உத்தரவிட்டது. அதன்படி ஜூலை 4 முதல் 6-ம் தேதி வரை விண் ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.
அதைத் தொடர்ந்து மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலகத்தில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப் பிக்க நூற்றுக்கணக்கான பெண்கள் நேற்று திரண்டனர். அங்கு அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டிருந்த காலிப்பணியிட விவரங்களை குறிப்பெடுத்தனர். அலுவலகத்துக்கு வெளியில் ஜெராக்ஸ் கடைகளில் விற்பனை செய்யப்பட்ட விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அலுவலகத்தில் கொடுக்க வந்தனர். ஆனால், விண்ணப்பங்களை வாங்க கல்வித் துறையினர் மறுத்தனர்.
உயர் நீதிமன்றக் கிளையின் இடைக்காலத் தடை காரணமாக அதன் ஆளுகைக்குட்பட்ட 14 மாவட்டங்களில் விண்ணப்பங்கள் வாங்கவில்லை. பின்னர் உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி விண்ணப்பங்கள் பெறப்படும் என்று கல்வித் துறையினர் விளக்கம் அளித்ததைத் தொடர்ந்து அனைவரும் திரும்பிச் சென்றனர்.
மதுரை மாவட்டத்தில் 9 பட்டதாரி ஆசிரியர்கள், 13 முது கலை பட்டதாரி ஆசிரியர்கள், 32 இடைநிலை ஆசிரியர் என மொத்தம் 54 காலிப் பணியிடங்கள் உள்ளன. இதில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஜூலை 7, 8 தேதிகளில் கவுன் சிலிங் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago